/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நான் சொல்லும் கதைகள் முதியோருக்கு துணையாக இருக்கு!
/
நான் சொல்லும் கதைகள் முதியோருக்கு துணையாக இருக்கு!
நான் சொல்லும் கதைகள் முதியோருக்கு துணையாக இருக்கு!
நான் சொல்லும் கதைகள் முதியோருக்கு துணையாக இருக்கு!
PUBLISHED ON : பிப் 08, 2024 12:00 AM

கார்ப்பரேட் கம்பெனியின் பொறுப்பு நிதி ஆலோசகர் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றினாலும், 'கதை சொல்லி' என்ற பணியை ஆத்மார்த்தமாக செய்து வரும், சென்னையைச் சேர்ந்த ரம்யா வாசுதேவன்: நான் பிறந்தது ராஜபாளையம். அப்பா வங்கியில் மேலாளராக இருந்தார்.
வீட்டில் யாருக்கும் வாசிக்கிற பழக்கமில்லை. தோல்விகளை ஏற்றுக் கொள்கிற பக்குவமில்லாதவள் நான். அதனால், என்னை யாரும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ள மாட்டாங்க. என் தனிமையை அப்போது, 'காமிக்ஸ்' புத்தகங்கள் தான் தீர்க்கும்.
வீட்டில் புத்தகங்கள் வாங்கி தரமாட்டாங்க. தோழியரை சம்மதிக்க வைத்து, பள்ளிக்கு நடந்து சென்று, பேருந்துக்கான காசில் புத்தகங்கள் வாங்குவேன்.
டிகிரி முடித்தவுடனே திருமணம். 'உனக்கு மாப்பிள்ளையை பிடிக்குதோ, இல்லையோ... மாப்பிள்ளையோட வீட்டை பிடிக்கும்; எங்கு பார்த்தாலும் புத்தகங்களாக இருக்கு'ன்னு அப்பா சொன்னார்.
கணவர் நிறைய ஆங்கில நாவல்கள் வாசிப்பார். திருமணத்துக்கு பின், விஸ்காம் படிச்சேன்.
ஒருமுறை நண்பர்களுடன் வாட்ஸாப் குரூப்பில், 'சாட்' பண்ணிட்டிருந்தபோது, 'யாராவது கதை சொல்லுங்க'னு கேட்டாங்க. நாம தான் நிறைய படிக்கிறோமேன்னு தங்கர்பச்சான் எழுதிய கதையை சொல்லத் துவங்கினேன்; பிடித்துப் போகவே, 'தினமும் கதை சொல்லு'ன்னு உற்சாகப்படுத்தினாங்க.
நாம் செய்யும் வேலை ரொம்ப முக்கியமானது என்று, கொரோனா சமயத்தில் தான் புரிந்தது. இதற்காக, பல வாட்ஸாப் குரூப்கள் துவங்கினோம். தினமும் காலை, 8:00 மணிக்கு கதையை பகிர்வேன்; தாமதமானால் கேட்க ஆரம்பித்து விடுவர்.
'ஆங்கிலத்தில் வரும் நாவல்கள், கட்டுரைகளையும் தமிழில் சொல்லத் துவங்கினேன்.
'தற்போது கதைக்கு என்றே, 20க்கும் மேற்பட்ட வாட்ஸாப் குரூப்கள் இருக்கு. அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தின், 'ஆடியோ லைப்ரரி'யில் நான் கூறிய, 700 கதைகளும், அசோக் நகர் நுாலகத்தில் நான்கு கம்ப்யூட்டரில், 'ஹெட்போன்' வைத்து வாசகர்கள் கேட்பது போன்றும் வசதி செய்து கொடுத்திருக்கின்றனர்.
தமிழகம் முழுதும் நுாலகர்களை ஒரு வாட்ஸாப் குரூப்பில் சேர்த்து, தினமும் நான் கூறிய கதைகளை, அந்தந்த நுாலகத்தோட வாசகர் வட்ட குரூப்களில் பகிர்ந்தனர். முதியோர் இல்லங்களில், 'ஸ்பீக்கர்' வாங்கி தந்து, 'பென்டிரை'வில் போட்டு காட்டுகின்றனர்.
முதியோர் இல்லங்களில் இருப்போர், 'நீ சொல்ற கதைகள் தாம்மா துணையா இருக்கு'னு சொல்றதை கேட்கும்போது நிறைவாக இருக்கிறது. கதையை கேட்கும் குழந்தைகளும், 'நாங்கள் வளர்ந்த பின் உங்களை மாதிரியே கதை சொல்வோம்'னு உறுதி கொடுக்கிறாங்க.

