தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்


PUBLISHED ON : அக் 16, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 16, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘ஆர்வம், உழைப்பு,

விடாமுயற்சி

இருந்தால்

ஜெயிக்கலாம்!’

சென்னை ஆவடியில், ‘சுகர் மை லவ் ஆர்கானிக் ஸ்கின் கேர்’ என்ற நிறுவனத்தை நடத்தி வரும், 30 வயதான பெண், ஹிம்ரா மின்ஹாஜ்:

என் 18 வயதில் நான் துவங்கிய முயற்சி தான், என் தொழிலுக்கான துவக்கம். நான் படித்த எத்திராஜ் கல்லுாரியில், இளம் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதற்கான கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடக்கும். நான், ‘பிசினஸ் மேனேஜ்மென்ட்’ மாணவி என்பதால் அதில் பங்கேற்பது, என் படிப்பின் ஒரு பகுதியாக இருந்தது.

அதில் பங்கேற்ற பலரும் அணிகலன்கள், ‘மொபைல் போன் கவர்’ மாதிரியான பொருட்களை விற்பனை செய்தனர். நான், அமெரிக்காவில் இருந்த என் அத்தை சொல்லி தந்த முறைப்படி, சர்க்கரையை மூலப்பொருளாக பயன்படுத்தி, முகத்திற்கு செய்யும் மென்மையான தேய்ப்பு சிகிச்சையான, ‘ஸ்கிரப்’ தயாரித்து பார்த்தேன்.

அது நன்கு பலன் கொடுக்கவே, பாட்டியிடம் 2,000 ரூபாய் கடன் வாங்கி, அதையே முதலீடாக வைத்து ஸ்கிரப் தயாரித்து, போட்டியில் பங்கேற்றேன். முதல் பரிசு கிடைத்ததுடன், 6,000 ரூபாய் வருமானமும் கிடைத்தது. அடுத்த ஆண்டு கண்காட்சியில் ஸ்கிரப்புடன் சேர்த்து, இயற்கை சோப் அறிமுகப்படுத்தி முதல் பரிசு வாங்கினேன்.

மூன்றாம் ஆண்டு போட்டியில், முகத்தை பொலிவாக்கவும், ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், சருமத்தை பராமரிக்கவும், முகத்தில் பூசப்படும் பொருளான, ‘மாஸ்க்’ தயாரித்து, மீண்டும் முதல் பரிசு வாங்கினேன். எங்கள் கல்லுாரியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பரிசு வாங்கியது, நான் மட்டுமே!

கல்லுாரி முடித்ததும், தனியார் வங்கி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போதும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் தொழிலை விடவில்லை. காலையில் வங்கி வேலை, இரவில் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டேன். ஒரு கட்டத்தில் வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு, முழு நேர வியாபாரத்தில் இறங்கினேன்.

வெளியூர்களில் நடைபெற்ற கண்காட்சிகளிலும் பங்கேற்றேன். மூலப்பொருட்கள் வாங்குவது முதல் தயாரிப்பது வரை, எதிலும் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை. என் தயாரிப்புகளில் சர்க்கரையே முக்கிய மூலப்பொருள் என்பதால், ‘சுகர் மை லவ்’ என்ற பெயரை என் நிறுவனத்திற்கு வைத்தேன்.

என்னிடம் ஐந்து பெண்கள் பணிபுரிகின்றனர். ஸ்கிரப், மாஸ்க், சோப், எண்ணெய், மெழுகுவர்த்தி என, 10க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கிறோம். மாதம் 4 லட்சம் ரூபாய் வரை வருமானமும், அனைத்து செலவுகளும் போக, 85,000 ரூபாய் வரை லாபமும் கிடைக்கிறது.

வெற்றிக்கு படிப்பு மட்டுமே உதவாது. ஆர்வம், உழைப்பு, விடாமுயற்சி இருந்தால், யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்.

தொடர்புக்கு: 99527 99680.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us