தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்


PUBLISHED ON : நவ 08, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சொல்கிறார்கள்/ 08/01/26 ஞாயிறு 2வது இதழ்

அவள் விகடன், செப்., 22, 2026, பக்: 52

‘பள்ளிகளில் இசையும்

ஒரு பாடமாக

இருக்க வேண்டும்!’

புதுக்கோட்டை மாவட்டம், மங்களக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த, நாதஸ்வர இசைக்கலைஞர் ராஜேஸ்வரி:

இது தான் என் சொந்த ஊர். தாத்தா நாதஸ்வர வித்வானாக இருந்தவர். அப்பாவும் நாதஸ்வர கலைஞர். அந்த பாரம்பரியம் தான், என்னையும் இசை துறைக்கு அழைத்து வந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக கச்சேரிகள், விழாக்களில் நாதஸ்வரம் வாசிக்கிறேன். தற்போது எம்.பி.ஏ.,வும் படித்து வருகிறேன்.

சிறு வயதில் நாதஸ்வரம் மீது ஆர்வம் இல்லை. ஆனால், தொலைக்காட்சியில் நாதஸ்வர இசை நிகழ்ச்சிகளை பார்க்கும்போது ஏனோ பிடித்திருந்தது. என்னை அறியாமல் ரசித்து பார்க்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில், ‘பெரும்பாலும் ஆண்களே நாதஸ்வரம் வாசிக்கின்றனரே... ஏன்?’ என்ற கேள்வி வந்தது.

அதன்பின், ‘நாதஸ்வரம் வாசிக்க முயற்சி செய்வோம்’ என்று முடிவெடுத்தேன். என் அப்பாவே குருநாதராக மாறி கற்றுக் கொடுத்தார். தற்போது, நாதஸ்வர வித்வான் பின்னையூர் ஹரிஹரனிடம் தொடர்ந்து கற்றுக் கொள்கிறேன்.

‘இதெல்லாம் உன்னால் முடியாது; விலகிவிடு’ என்றெல்லாம் பலர் சொல்லி இருக்கின்றனர். ஆனால், எந்த காரணத்துக்காகவும் நாதஸ்வரத்தை விட்டுவிடக் கூடாது என்பதில் விடாப்பிடியாக இருந்தேன்; இனியும் இருப்பேன். பெண்ணாலும் இந்த துறையில் சிறந்து விளங்க முடியும் என்பதை உலகுக்கு உரக்க சொல்வதே என் லட்சியம்.

இக்கட்டான பல சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு சமாளிக்க கற்றுக் கொண்டேன். அந்த அனுபவங்களே எனக்கு தன்னம்பிக்கையை அதிகப்படுத்தின. அந்த நம்பிக்கையே அப்பாவுடன் இணைந்து, ஓர் இசைக்குழுவை தொடங்கவும் வாய்ப்பு கொடுத்தது. தற்போது எங்களுடன் ஐந்து இசைக் கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.

தஞ்சாவூரில் உள்ள கொங்கணேஸ்வரர் கோவிலில் நடந்த நவராத்திரி விழா தான், நான் பங்கேற்ற முதல் இசை நிகழ்ச்சி. நிகழ்ச்சி முடிந்ததும், தேடி வந்து பலரும் பாராட்டினர்.

பாரம்பரிய இசையின் மதிப்பை உணர்ந்து, அவற்றை வளர்ப்பதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும். பள்ளிகளில் இசை ஆசிரியர்களை நியமித்து, ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இதில், ஆண் – பெண் பேதம் பார்க்க வேண்டியது இல்லை.

மற்ற பாடங்களை போல் இசையையும் ஒரு பாடமாக கொண்டு வந்தால், மாணவர்களுக்கு சிறு வயது முதலே இசை மீது ஆர்வம் உருவாகும். முக்கியமாக, இசைக் கலைஞர்களுக்கு அரசு ஊக்கமும், ஆதரவும் வழங்க வேண்டும். அப்படி செய்தால் இந்த கலை வளர்வதோடு, புதிய இசைக் கலைஞர்களும் உருவாவர். அதிலும், பெண்கள் இசை துறையில் அதிகமாக முன்னேற முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us