தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்


PUBLISHED ON : நவ 10, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 10, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரசாயனம் இல்லாத காய்கறிகளை சாகுபடி செய்கிறேன்!

புதுக்கோட்டை மாவட்டம், தெத்துவாசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜய்: என் பெற்றோர் விவசாயத்தால் நிறைய சிரமப்பட்டனர். அதனால் நானும், என் இரு தங்கைகளும் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்றே விரும்பினர்; என்னை கோவையில் பொறியியல் படிக்க வைத்தனர். ஆனால், எனக்கோ படிப்பை முடித்த பின், வேலைக்கு செல்ல விருப்பம் இல்லை. 'நம் குடும்பம் வேளாண்மையை சார்ந்து இயங்குகிறது. நாம் ஏன் மற்ற தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும்?' என்று சொந்த ஊருக்கே திரும்பினேன்.

ரசாயன உரங்களால் மண்ணில் வாழும் உயிரினங்கள், நீர்நிலைகள், நிலத்தடி நீர் என, இயற்கையின் பல்வேறு கூறுகளும் பாதிக்கப்படுகின்றன. 'இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்களை பயன்படுத்தி தான் உற்பத்தி செய்ய வேண்டுமா?' என்ற கேள்வியே, ரசாயனமில்லாத இயற்கை விவசாயத்தை நோக்கி என்னை அழைத்து சென்றது.

ஆரம்பத்தில் விமர்சனங்களை மட்டுமே சந்தித்தேன்; ஆனாலும் கலங்கவில்லை. எங்கள் தோட்டத்தில் கரும்பு, வாழை, தர்பூசணி போன்ற பயிர்களையே பெரும்பாலும் சாகுபடி செய்தனர்.

ரசாயன உரங்கள் இல்லாமல் விவசாயம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தபோது, காய்கறிகளையே பயிரிட விரும்பினேன். வீடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களான காய்கறிகளில் தான் ரசாயனமும் அதிகம் என்பதால், அந்த முடிவை எடுத்தேன். ஆரம்பத்தில், 'இது சாத்தியமில்லை' என்றே பலரும் கூறினர். ஆனால், எங்கள் நிலத்தின் விளைச்சலே, விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலாக மாறியது.

ஆயினும், பல ஆண்டுகளாக ரசாயன உரங்கள் பயன்படுத்திய எங்கள் நிலத்தை, இயற்கை வேளாண்மைக்கு மாற்றுவது எளிதாக இருக்கவில்லை; நிறைய தோல்விகளை எதிர்கொண்டேன். உதாரணமாக, செவ்வாழை சாகுபடியில், 800 வாழைக்கன்றுகளில் 200 வாழைக்கன்றுகள் மட்டுமே நன்கு வளர்ந்து, அறுவடை செய்ய முடிந்தது.

இடுபொருட்களை எப்படி பயன்படுத்துவது என்பது தெரியாததாலும் தோல்வி ஏற்பட்டது. ஆனால், தவறுகளை திருத்திக் கொண்டு, மீண்டும் முயற்சி செய்ததில், அடுத்தாண்டு அதே செவ்வாழை சாகுபடியில் சிறப்பான லாபம் ஈட்டினேன்.

இயற்கை வேளாண்மையுடன் விதைகள் விற்பனை, மதிப்பு கூட்டல் செய்வது, தமிழகம் முழுதும் கண்காட்சிகளில் அரங்குகள் அமைப்பது போன்றவற்றையும் செய்து வருகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us