தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்


PUBLISHED ON : நவ 13, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 13, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'3 ஆண்டுகள்

போராட்டத்திற்கு

பலன் கிடைத்தது!'

கணவருக்கு உடல்நலமில்லாத சூழலில், சொந்தமாக கடை வைத்து குடும்பத்தை காப்பாற்றி வரும், சென்னை அருகே உள்ள குன்றத்துார் பகுதியைச் சேர்ந்த செல்வி:

என் கணவர் கட்டுமான கூலித் தொழிலாளி; 2020ம் ஆண்டி-ல் எதிர்பாராத விதமாக மாடியிலிருந்து கீழே விழுந்ததில், இரு கால்களிலும் எலும்பு முறிந்து விட்டது; வேலைக்கு செல்ல முடியாத நிலைமை. அப்போது, கொரோனா ஊரடங்கால் ஊரே முடங்கியிருந்த நேரம்.

அத்துடன் குடும்பமும் முடங்கி விட்டது; என்ன செய்வதென்றே தெரியவில்லை. சாப்பிடணும், மகனை படிக்க வைக்கணும், உடல்நிலை சரியில்லாத கணவரையும் கவனிக்கணும் என்ற நிலைமை.

வீட்டை விட்டுட்டு வேலைக்கு செல்ல முடியாது; அதற்காக சும்மா இருக்கவும் முடியாது. காலையில் எழுந்து கஞ்சியாவது குடிச்சாகணுமேன்னு யோசிச்சு, சிறிய பெட்டிக்கடை வைக்கலாம் என்று முடிவெடுத்தேன். வியாபாரம் செய்த மாதிரியும் இருக்கும்; வீட்டை பார்த்துக் கொண்ட மாதிரியும் இருக்கும் என்று நினைத்தேன்.

பார்ப்பதற்கு சிறு தொழில் மாதிரி தெரிந்தாலும், பெட்டிக்கடையில் அவ்வளவு நுணுக்கங்கள் இருக்கின்றன; சவால்களும் அதிகம்.

அலைந்து திரிந்து பொருட்கள் வாங்க வேண்டும். காலையில் விடியும் முன்பே கடையை திறக்கணும். இல்லாத பொருளை தான் கேட்பர்; கடன் சொல்லி போவர். இது சில்லரை வியாபாரம் என்பதால், பெரிய பணப்புழக்கம் இருக்காது. கடையை மூட இரவு 9:00 மணிக்கு மேல் ஆகிவிடும்.

வியாபாரம் சரியாக நடைபெறாததால், ஒரு கட்டத்தில் சோர்வடைந்தேன். ஆனால், கணவர் முழு தைரியம் அளித்தார். அதன்பின், என் கடையில் சிறு இடம் ஒதுக்கி, காய்கறிகள் வாங்கி விற்பனை செய்ய ஆரம்பித்தேன். வாடிக்கையாளர் கேட்கும் பொருளை எழுதி வைத்துக் கொள்வேன். அடுத்த முறை அவர்கள் வரும்போது, அந்தப் பொருள் இருப்பது போல பார்த்துக் கொள்வேன்.

தொடர்ந்து மூன்று ஆண்டுகள் போராடினேன். கஷ்டப்பட்டதற்கு பலன் கிடைத்தது. ஏரியாவில், 'செல்வி அக்கா கடை' என, இப்போது பெயர் வாங்கியாச்சு. வெளியில் எங்காவது பார்த்தால் வாடிக்கையாளர்கள் பாசமாக பேசுகின்றனர். எதுவும் தெரியாமல் வீட்டிற்குள் அடங்கிக் கிடந்த எனக்கு வெளியுலகம் தெரிய ஆரம்பித்தது. பல நல்ல மனிதர்களின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. ஒரு நாளைக்கு, 5,000 ரூபாய் வரை வியாபாரம் ஆகிறது.

எங்கள் கடைக்கு பக்கத்தில் வேறு கடைகள் அதிகமாக இல்லை. அதேநேரத்தில் இந்தப் பக்கம் வீடுகள் குறைவாக இருப்பதால், வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை. அதற்காக, இப்போது நோட்டு, புத்தகங்கள், அவை குறித்த பொருட்களையும் சேர்த்து வாங்கி வைக்கலாம் என இருக்கிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us