தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்


PUBLISHED ON : நவ 27, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கடவுள் கொடுத்த

வாய்ப்பு தான்

இந்த வேலை!'

சதுரகிரி யாத்திரை வரும் பக்தர்களில் மலையேற முடியாதவர்களை, 'டோலி' என்ற தொட்டிலில் படுக்க வைத்து, தோளில் சுமந்து செல்லும் தொழில் செய்து வரும், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பைச் சேர்ந்த ஆலடியான்:

என் 7 வயதில், எங்க அம்மா என்னை கீழே உள்ள பாறையில் உட்கார வைத்துவிட்டு, அன்னதானத்துக்காக சதுரகிரி மலைக்கு காய்கறிகளை சுமந்து செல்வாங்க. என் 13 வயதில், 'நானும் மலை ஏறி வருகிறேன்'னு அடம் பிடித்தேன். முதல் முறையாக மலையேறி சென்றபோது சுத்தமாக நடக்க முடியவில்லை; அம்மா இடுப்பிலும், முதுகிலும் சுமந்து வந்தாங்க.

படித்தது 10ம் வகுப்பு தான்; அதற்கு மேல் படிப்பு ஏறவில்லை. மீண்டும் 14 வயதில் மலை ஏறத் துவங்கி, தொடர்ந்து அம்மாவுடன் செல்ல ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக இந்த மலை பழகி விட்டது. இப்போது கண்ணை கட்டிவிட்டால் கூட, தடம் மாறாமல் ஏறி, இறங்கி விடுவேன்.

ஆரம்பத்தில் மாதத்திற்கு இரு முறை பூஜை பொருட்கள், காய்கறிகள் என சிறு சிறு சுமைகளை சுமந்து செல்வேன்; அதன்பின், 'டோலி' துாக்க ஆரம்பித்தேன்; இந்த வேலை மிகவும் கஷ்டம்.

இந்த மலையில், 'மொபைல் போன் டவர்' கிடைக்காது. உச்சிக்கு சென்றால் தான் மொபைல் போனில் பேச முடியும். ஒரு முறை நாங்கள் மலை உச்சியில் நின்றிருந்தோம். அப்போது, ஒரு போன் அழைப்பு வந்தது.

மலையேறி வந்த ஒரு பக்தருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினர். ஓடிச் சென்று பார்த்தோம். ஒரு பெண் அழுதபடியே இருந்தார். அவருடைய அப்பா உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தார். அவர்கள் வேறு மொழி பேசுவோர். எங்களை பார்த்ததும், கையெடுத்து கும்பிட்டு உதவி கேட்டனர். அந்நேரத்தில் எது குறித்தும் யோசிக்காமல், அவரை துாக்கி அடிவாரத்துக்கு வந்து, காரில் ஏற்றி விட்டோம்; வருமானம் போச்சு என்று கஷ்டமாகத் தான் இருந்தது.

ஆனால், ஒரு மாதம் கழித்து, அவர்கள் மீண்டும் வந்தனர். 'சாமி மாதிரி வந்து எங்கள் அப்பா உயிரை காப்பாற்றினீர்கள்; மிக்க நன்றி' என்று கூறி, நிறைய பணம் கொடுத்து சென்றனர். அதன்பின் தான் எனக்கு புரிந்தது... இந்த வேலை நமக்கு கடவுள் கொடுத்த வாய்ப்பு என்று!

பொருளை துாக்கிச் சென்றால், 1,300 ரூபாய்; பக்தர்களை துாக்கிச் சென்றால், 2,000 ரூபாய். திடீர் என வெள்ளம் வந்து விடும். தண்ணீருக்குள் இறங்கி, இதுவரை நுாற்றுக்கணக்கான மக்களை காப்பாற்றி உள்ளோம். சில நேரம், உயிரில்லாதவர்களையும் கீழே சுமந்து வர வேண்டி இருக்கும். சாமி பார்க்க வருவோரை துாக்கிச் செல்வதும் நாங்கள் தான்; சாமிகிட்ட போனவங்களை துாக்கிட்டு கீழே வருவதும் நாங்கள் தான்!

Image 1651134

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us