/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நாடகத்தில் இது எனக்கு 50வது ஆண்டு!: மாதம் ரூ.5 லட்சம் என்ற இலக்கை நோக்கி ஓடுகிறேன்!
/
நாடகத்தில் இது எனக்கு 50வது ஆண்டு!: மாதம் ரூ.5 லட்சம் என்ற இலக்கை நோக்கி ஓடுகிறேன்!
நாடகத்தில் இது எனக்கு 50வது ஆண்டு!: மாதம் ரூ.5 லட்சம் என்ற இலக்கை நோக்கி ஓடுகிறேன்!
நாடகத்தில் இது எனக்கு 50வது ஆண்டு!: மாதம் ரூ.5 லட்சம் என்ற இலக்கை நோக்கி ஓடுகிறேன்!
PUBLISHED ON : டிச 14, 2025 03:12 AM

நாடக கலைஞர், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மற்றும் நடிகர் என, பன்முகங்கள் கொண்ட வரதராஜன்:
கடந்த, 1975ல் இருந்து, நாடகத்தில் நடிக்கிறேன். வங்கியில் வேலை பார்த்து வந்தேன். வேலை முடிந்ததும், நாடகத்தில் நடிக்க சென்று விடுவேன். 1977ல், துார்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக தேர்வானேன்.
எவ்வளவு வேலைகள் இருந்தாலும், நாடகத்தை மட்டும் தவற விட மாட்டேன். நடிக்கும் போது, நாடகம் பார்க்க வந்த அத்தனை பேரும் கை தட்டுவதை பார்த்தால், மனதில் இருக்கும் எல்லா கஷ்டமும் போய்விடும்.
இஷ்டப்பட்டு நாடகத்தில் நடிப்பதால், இன்று வரை எனக்கு கஷ்டமாக தெரியவில்லை. பணமும், புகழும் கிடைத்து விட்டது. அதனால், சினிமாவுக்கு போக வேண்டும் என தோன்றவில்லை. என்னை தேடி வந்த சில படங்களில் நடித்தேன். என் ஆத்ம திருப்திக்காக நாடகங்கள் தயாரித்தும், நடித்தும் வருகிறேன்.
திடீரென ஒருநாள், 'வீயெஸ்வி' எனும் வீ.ஸ்ரீனிவாசன் போன் செய்து, 'தியாகராஜர்னு ஒரு புத்தகம் எழுதியிருக்கேன். அதை நீங்க நாடகமா பண்ண முடியுமா?' என கேட்டார். முதலில் மறுத்தாலும், அந்த கதைக்களம் பிடித்திருந்ததால், ஒப்புக் கொண்டேன்.
அந்த நாடகம் தயாரிக்க, இரண்டாண்டுகள் எடுத்துக் கொண்டோம். பாம்பே ஜெயஸ்ரீ, 'சம்பளமே வேண்டாம்' என சொல்லி, நாடகத்துக்கு இசையமைத்தார்.
திருவையாறில் பூஜை போட்டு, நாடக ஒத்திகையை ஆரம்பித்தோம். உலகம் முழுதும் இதுவரை, 180 காட்சிகள் நடத்தியுள்ளோம். அந்த நாடகத்துக்கு பின், எங்கே சென்றாலும், என்னை, தியாகராஜராகவே பார்க்க ஆரம்பித்தனர்.
அந்த நாடகத்தின் வெற்றியால், 'சங்கீத மும்மூர்த்திகள்' என, இன்னொரு நாடகம் தயாரிக்க முடிவு செய்தோம்.
அப்போது, 'கொரோனா' ஊரடங்கு துவங்கியது. ஊரடங்கு முடிந்ததும், பாம்பே ஜெயஸ்ரீக்கு உடம்பு முடியாமல் போனது. அதனால், அப்படியே நிறுத்தி வைத்தோம்.
கடந்தாண்டு ஜெயஸ்ரீ, போன் செய்து, 'நாடகத்தை ஆரம்பிக்கலாம்' எனக் கூறி, மிக அழகாக இசையமைத்து கொடுத்தார். இதில், இசைக்கு தான் முக்கிய இடம். எனக்கு இசை பற்றி எதுவும் தெரியாது என்பதால், வீ.ஸ்ரீநிவாசனும், ஜெயஸ்ரீயும் அதை கவனித்து கொண்டனர்.
இந்த நாடகத்துக்காக, 25 பேர் வேலை பார்த்துள்ளோம். நிறைய பேர், இந்த தலைமுறையை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இசை மீதான ஆர்வத்தை பார்த்தேன். கர்நாடக இசை இன்னும் பல யுகங்கள் வாழும்.
நாடகத்தில் இது எனக்கு, 50வது ஆண்டு. சங்கீத மும்மூர்த்திகள் நாடகத்தை, வரும் ஜன., 9ல் மேடையேற்றம் செய்ய உள்ளோம். இந்த நாடகமும் வெற்றி பெற வேண்டும் என, ஒட்டுமொத்த குழுவும் விரும்புகிறோம்.
மாதம் ரூ.5 லட்சம் என்ற இலக்கை நோக்கி ஓடுகிறேன்!
'வனம்
நேச்சுரல்ஸ்' என்ற பெயரில், பாரம்பரிய அரிசி வகைகளை விற்பனை செய்து வரும்,
திண்டுக்கல் மாவட்டம், பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த துரை பாண்டி:
நான், ஆஸ்திரேலியாவில், 12 வருடங்கள் சுரங்க பொறியாளராக வேலை செய்தேன்.
சொந்தங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, 2019ல் இந்தியா வந்தேன். என்
மகனுக்கு, 1 வயதாகும்போது, ஊட்டச்சத்து குறைந்து, அவனுடைய உடலமைப்பு மாறி
கால்கள் சிறுத்து விட்டன.
எங்களுக்கு தெரிந்த ஒருவர்,
சிறுதானியம், பாரம்பரிய அரிசிகள், 'நட்ஸ்'கள் மற்றும் பயறு வகைகளை கொடுக்க
சொன்னார். அதன்படி கொடுக்க ஆரம்பித்து, என் மகனுக்கு சிறிது சிறிதாக
சரியானது.
மற்ற அரிசி வகைகளை விட, பாரம்பரிய அரிசி வகைகள்
ஊட்டச்சத்து மிக்கதாகவும், உடலை வலுப்படுத்தும் வகையிலும் இருப்பதை
அறிந்தோம். ஆனால், அந்த அரிசி வகைகள் எளிதில் கிடைக்கும் வகையில் இல்லை.
அப்போது தான், பாரம்பரிய அரிசி வகைகளை நாமே ஏன் வாங்கி விற்பனை செய்யக்கூடாது என்ற யோசனை தோன்றியது.
இதன்படி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கிச்சிலி சம்பா, சீரக சம்பா,
துாயமல்லி, பூங்கார் மற்றும் காட்டுயானம் என, 20 வகையான பாரம்பரிய அரிசி
வகைகளை நேரடியாக விவசாயிகளிடம் வாங்கி, 'பேக்' செய்து விற்பனை செய்ய
துவங்கினேன்.
ஆரம்பத்தில், சிலருக்கு இந்த அரிசியின் பெயர் கூட
தெரியாது. அதேபோல், இதை எப்படி சமைப்பது என்பதும் தெரியாது. அதனால், 'அரை
கிலோ அரிசி வாங்கி, சமைத்து சாப்பிட்டு பார்த்து விட்டு கூப்பிடுங்கள்.
'எவ்வளவு வேண்டு மானாலும், 'சப்ளை' செய்கிறோம். அதிக அளவில் வாங்கும்போது,
விலை குறைவாகவும் கொடுப்போம்' என்றேன். அந்த உத்தி நன்றாகவே கை கொடுத்தது.
சென்னையில், ஐ.டி., நிறுவனங்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் உள்ள
பல்பொருள் அங்காடிகளில், பாரம்பரிய அரிசி வகைகளுக்கு நல்ல வரவேற்பு
இருப்பதை பார்க்க முடிந்தது. எங்களுடைய அரிசி வகைகள் தரமாகவும், நல்ல,
'பேக்கிங்'கில் இருந்ததாலும், மக்கள் ஆர்வமாக வாங்க துவங்கினர்.
பார ம்பரிய அரிசி தொழிலை செய்யும்போது, எனக்கு முள்சீத்தா பழம் பற்றி
தெரிந்தது. இந்த பழம் மருத்து வ குணம் நிறைந்தது. அதனால் என் தோப்பில், 150
முள் சீத்தா பழக்கன்றுகளை வாங்கி வந்து நட்டேன்; மூன்று ஆண்டுகளில் பலன்
கொடுக்க துவங்கியது.
பழ விற்பனை அல்லாமல், முள்சீத்தா இலையை
பவுடராக்கி, சுடுநீரில் கலக்கி குடிக்கும் வகையில், 3 கிராம் அளவில் தேநீர்
பைகளாக விற்பனை செய்து வருகிறேன்.
அரிசி வகைகள், மற்றும்
முள்சீத்தா வாயிலாக மாதம், 2 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறேன். மாதத்துக்கு, 5
லட்சம் ரூபாய் என்ற இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன்.
தொடர்புக்கு:
96006 24466

