தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ 'வத்தல், வடகம் தொழில் தான் என் வாழ்வாதாரம்!'

 'வத்தல், வடகம் தொழில் தான் என் வாழ்வாதாரம்!'

 'வத்தல், வடகம் தொழில் தான் என் வாழ்வாதாரம்!'


PUBLISHED ON : செப் 25, 2026 02:48 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 25, 2026 02:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த சுடலை வடிவு ஆச்சி:

சாத்தான்குளம் தான் என் சொந்த ஊர். இப்போது, நெல்லை டவுனில் வசித்து வருகிறேன். எங்கள் வீட்டில் என்னுடன் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர். நான் தான் மூத்த பெண். மூத்த பிள்ளையாக பிறந்தாலே, தன்னால ஒரு பொறுப்பு வந்து ஒட்டிக்கிடுமே... அப்படி தான் எனக்கும்.

அப்பா, 10ம் வகுப்பு வரை தான் படிக்க வைத்தார். அதன்பின் குடும்ப கஷ்டம். 26 வயதில் திருமணம் முடிந்தது. ஒரு பெண், ஒரு ஆண் என இரு குழந்தைகள் பிறந்தன.

திருமண வாழ்க்கையும் நன்றாக சென்று கொண்டிருந்தது. அப்படியே சந்தோஷமாகவே இருந்துவிட முடியுமா என்ன?

திடீரென கணவருக்கு காச நோய் வந்தது. மருத்துவர்கள் எவ்வளவோ மெனக்கிட்டனர். ஆனாலும், எங்களை தவிக்கவிட்டு மறைந்து விட்டார். என் பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற வைராக்கியம் இருந்தது; வசதி, வாய்ப்புகள் இல்லை.

உடன்பிறந்தவர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. அதற்காக நான் சோர்ந்து உட்காரவில்லை. என்னால் முடிந்த அளவு உழைத்து, அவர்களை படிக்க வைத்தேன்.

முதலில் ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்தேன்; அதன்பின் துணி கடையில் வேலை பார்த்தேன். ஓட்டம் எனில் அப்படி ஒரு ஓட்டம்; ஓடிக் கொண்டே இருந்தேன்.

ஒரு வழியாக மகளை பிளஸ் 2வும், மகனை ஐ.டி.ஐ.,யும் படிக்க வைத்தேன். இருவருக்கும் தற்போது திருமணமாகி, அவர்கள் வாழ்க்கை நன்கு சென்று கொண்டிருக்கிறது.

இப்போது நான் தனியாக இருக்கிறேன். அதற்காக, 'ஐயோ என்னை விட்டு சென்று விட்டனரே' என்று யாரையும் குறை சொல்லவில்லை.

அவர்களுக்கும் குடும்பம் என்று ஆகி விட்டது. நம்மையே பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? சிரமமான வாழ்க்கை தான். சாப்பிடுவதற்கு அரசு ரேஷன் அரிசி தருகிறது. ஆனாலும், மற்ற செலவுகள் இருக்கிறதே...

முதியோர் பென்ஷன் மாதம் 1,200 ரூபாய் வருகிறது. ஆனால், இப்போது விற்கும் விலைவாசிக்கு அது எப்படி போதும்? வீட்டு வாடகை, 'கரன்ட் பில்' எல்லாம் சேர்த்து மாதம் 3,000 ரூபாய் வந்துவிடும்.

அதனால், என் பிழைப்புக்கு வத்தல், வடகம் தயாரித்து விற்கிறேன். வத்தல் போடும் தொழில் பார்க்க சுலபமாக இருக்கும். ஆனால், அவ்வளவு எளிது இல்லை. மழை பெய்தால் அவ்வளவு தான்.

வத்தல் நன்கு காய வேண்டும் எனில், குறைந்தது நான்கு நாட்களாவது வெயில் வேண்டும். வடகம் செய்வதற்கான பொருட்களின் விலையும் அதிகமாகி விட்டது.

அதிகமாக பாடுபட்டாலும் வருமானம் குறைவு தான். அதற்கென இதையும் விட்டு விட முடியுமா என்ன?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us