/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இயற்கையுடன் இயைந்து மகிழ்ச்சியாக வாழ்கிறோம்!
/
இயற்கையுடன் இயைந்து மகிழ்ச்சியாக வாழ்கிறோம்!
PUBLISHED ON : ஆக 10, 2025 12:00 AM

மாட்டுச்சாணம் மற்றும் மூலிகைகளில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும், செ ன்னை அண்ணா நகரைச் சேர்ந்த நாகலட்சுமி:
என் சொந்த ஊர் சென்னை தான். கணவரின் பூர்வீகம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிளாம்பாடி. சென்னை யில் தனியார் கம்பெனி ஒன்றில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். அண்ணா நகரில் வசிக்கிறோம்.
கணவரின் சொந்த ஊரில் இருந்து சிறுவிடை ரக நாட்டுக் கோழிகளும், ஒரு மாடும், கன்றுக்குட்டியும் வாங்கி வளர்த்து வந்தோம்.
கால்நடைகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதால், தனியார் கல்லுாரி உதவி பேராசிரியை பணியை ராஜினாமா செய்தேன். தற்போது என்னிடம், 20 நாட்டுக் கோழிகள், மூன்று மாடுகள், இரண்டு கன்றுக்குட்டிகள் உள்ளன.
மாட்டுச்சாணத்தில், 'கோபர் காஸ்' உற்பத்தி செய்து, சமையல் செய்ய பயன் படுத்தி வருகிறோம்.
ரசாயன நச்சுத்தன்மை இல்லாத, நல்ல சத்தான காய்கறிகளை மாடித் தோட்டத்தில் உற்பத்தி செய்கிறோம்.
எங்கள் வீட்டில் வளர்க்கி ற மாடுகள் வாயிலாக தினமும், 12 லிட்டர் பால் கிடைக்கும். எங்கள் தேவைக்கு போக, மீதமுள்ள பா லை அருகில் உள்ள வீடுகளுக்கு, 1 லிட்டர், 80 ரூபாய் என விற்பனை செய்து விடுவோம்.
மாடுகள் வாயிலாக நிறைய சாணம் கிடைக்கும். அதில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தான் கோபர் காஸ் உற்பத்திக்கு பயன்படுத்துகிறோம்.
மீதி சாணத்தில் வறட்டி, சாம்பிராணி, மூலிகை கொசு விரட்டி தயாரித்து விற்பனை செய்கிறோம். சாணத்துடன், 108 ஹோம திரவிய பொடிகள் கலந்து சாம்பிராணி தயாரித்து, ஒரு சாம்பிராணி வில்லை, 7 ரூபாய் என விற்பனை செய்கிறோம்.
மேலும், சாணத்துடன் நொச்சி, வேம்பு, துளசி, லெமன் கிராஸ், பேய் வி ரட்டி உள்ளிட்ட மூலிகைகள் மற்றும் இலுப்பை எண்ணெய் கலந்து மூலிகை கொசு விரட்டி தயாரித்து, 7 ரூபாய் என விற்பனை செய்கிறோம்.
தவிர, நலங்கு மாவு சோ ப்பு, மூலிகை கூந்தல் தைலம், பற்பொடி, பாத்திரம் கழுவும் திரவம், தரையை சுத்தம் செய்யும் திரவம் உள்ளிட்ட பொருட்களும் தயார் செய்கிறோம். 20 நாட்டுக் கோழிகள் வளர்க்கிறதால, ஆண்டு முழுக்க எங்கள் வீட்டு தேவைக்கான முட்டைகள் கிடைக்கின்ற ன.
எங்கள் தேவை போக, மீதமுள்ளவற்றை வெளியில் விற்பனை செய்கிறோம்.
இந்த பொருட்கள் விற்பனை வாயிலாக, மாதத்திற்கு, 30,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது. இயற்கையுடன் இயைந்த தற்சார்பு வாழ்க்கை வாயிலாக, ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கிறோம்.
தொடர்புக்கு:
97104 52979.