/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நாள்தோறும் 2 லட்சம் பாட்டில் வாசனை திரவியம் தயாரிக்கிறோம்
/
நாள்தோறும் 2 லட்சம் பாட்டில் வாசனை திரவியம் தயாரிக்கிறோம்
நாள்தோறும் 2 லட்சம் பாட்டில் வாசனை திரவியம் தயாரிக்கிறோம்
நாள்தோறும் 2 லட்சம் பாட்டில் வாசனை திரவியம் தயாரிக்கிறோம்
PUBLISHED ON : நவ 01, 2024 12:00 AM

'எஸ்.எப்.பி., சன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற வாசனை திரவிய தயாரிப்பு நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரியான ஜித்தேஷ் பட்டேல்: எங்கள் பூர்வீகம் குஜராத். எங்கப்பா தினேஷ் பட்டேல் தான், எங்கள் குடும்பத்தின் முதல் தலைமுறை தொழில் முனைவோர். பிசினஸ் செய்வதற்கான திறன்களை வளர்த்துக் கொண்ட எங்கப்பா, வாசனை திரவியங்களுக்கு எதிர்காலத்தில் சிறப்பான வரவேற்பு இருக்கும் என, கணித்தார். முறையான திட்டமிடலுடன், தன் தம்பிகள் மூன்று பேருடன் சேர்ந்து, 1992-ல் சென்னையில் இந்நிறுவனத்தை ஆரம்பித்தார். அப்போதே ஏற்றுமதிக்கு தான் முன்னுரிமை கொடுத்தார்.
கடந்த 2000-ம் ஆண்டுக்கு பின், இளைஞர்கள் அதிக அளவில் வாசனை திரவியங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். தேவைக்கேற்ப ஆர்டர்களும் அதிகமானதால், உற்பத்தியை அதிகரித்தார்.
இந்நிலையில், எம்.பி.ஏ., முடித்த நான் தொழில் முனைவோராக ஆசைப்பட்ட போது, 'நீ முதல்ல ஓர் ஊழியரா இருந்து தொழில் கத்துக்கோ; அதுக்கப்புறமா தனியா பிசினஸ் பண்ணலாம்' என்று கூறியதுடன், அவரின் நிறுவனத்திலேயே மார்க்கெட்டிங் துறை அலுவலராக என்னை சேர்த்துக் கொண்டார்.
அதுவரை, நாங்கள் உள்நாட்டு விற்பனையில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கவனம் செலுத்தவில்லை. அந்த நிலையை மாற்றி, சாமானியர்களுக்கும் கட்டுப்படியாகிற விலையில் வாசனை திரவியங்களை கொடுக்க வேண்டும் என திட்டமிட்டு, 20 ரூபாய்க்கு சிறு பாட்டிலில் 2 மி.லி., அளவுக்கு வாசனை திரவியத்தை விற்பனை செய்தோம்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த வெரைட்டிக்கும் நல்ல வரவேற்பு இருப்பதால், மாதந்தோறும் 5.70 லட்சம் பாட்டில்கள் தயாரிக்கிறோம்.
மேலும், 800-க்கும் மேற்பட்ட ரகங்களில் வாசனை திரவியங்களை தயாரிப்பதுடன், 'அத்தர், பாடி ஸ்பிரே, நறுமண சாம்பிராணி, ரூம் பிரெஷ்னர்' போன்ற பிற வாசனை தயாரிப்புகளும் எங்கள் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்
படுகின்றன.
இந்நிறுவனத்தின் மற்றுமோர் உற்பத்தி ஆலை குஜராத் மாநிலத்தில் செயல்படுகிறது. அங்கு தினமும், 2 லட்சம் பாட்டில்களில் வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன.
எங்கள் பிராண்டுகள் தவிர, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பெர்பியூம் தொழிலில் கோலோச்சும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களின் பிராண்டுகள் பெயரிலும் வாசனை திரவியங்களை தயாரித்து கொடுக்கிறோம். ஆண்டுக்கு, 150
கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்து முன்னேறி கொண்டிருக்கிறோம்.
வாசனை திரவியங்களின் சந்தை தொடர்ந்து வளர்ந்து வருவதால், நாங்களும் மேலும் மேலும் வளர வேண்டும் என்ற
உற்சாகத்துடன் உழைக்கிறோம்.

