/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
எங்கள் ஓவியங்களை விற்பனை செய்ய சந்தைகள் வேண்டும்!
/
எங்கள் ஓவியங்களை விற்பனை செய்ய சந்தைகள் வேண்டும்!
PUBLISHED ON : பிப் 18, 2024 12:00 AM

குறும்பா பழங்குடியின மக்களின், அழிந்து வரும் குறும்பா ஓவியத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள, சோபியா:
எங்கள் சமூகத்தில் படிக்கிற பசங்க, பிளஸ் 2 வகுப்பை தாண்டினாலே பெரிய விஷயம். அப்படியே முடித்தாலும் வேலைக்கு செல்வதும் ரொம்ப சிரமம். சிறு வயதிலேயே அனைவருக்கும் திருமணமாகி குழந்தை இருக்கும்.
வேலைக்கு போகாமல், வருமானம் இல்லாமல், வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் இருந்தபோது தான், இந்த ஓவியக்கலையை கையில் எடுத்தோம்.
என்ன தான் இது எங்களின் பாரம்பரிய ஓவியமாக இருந்தாலும், எங்கள் ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியம், கிருஷ்ணன் தான் எங்களுக்கு இதை முறையாக கற்றுக் கொடுத்தனர். அதற்கு பின்தான் இதன் வரலாறும், சிறப்பும் புரிந்தது.
எங்கள் மூதாதையர்கள் வரைந்த பாறை, குகை ஓவியங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தும் இருக்கு.
இந்த ஓவியங்களில் உறையும் காட்சிகள் முழுக்க, எங்கள் குறும்பா மக்களோட வாழ்வும், கலாசாரமும் தான். நாங்கள் தற்போது வரைந்து கொண்டிருப்பது அதன் தொடர்ச்சி.
எங்களது முன்னோர், வேங்கை மரத்தின் பாலில் செய்த இயற்கை வண்ணங்கள் பயன்படுத்தி வரைந்தனர்.
நாங்கள் வேங்கைமர பால் வண்ணங்களுடன், 'அக்ரிலிக்' பெயின்ட் பயன்படுத்துகிறோம். இயற்கை வண்ணங்களை உருவாக்கவும் நிறைய முயற்சி செய்து வருகிறோம்.
ஓவியம் வரைய அரசு இட வசதி செய்து கொடுத்தால் உதவியாக இருக்கும். மேலும், எங்கள் ஓவியங்களை விற்பனை செய்யவும், எங்கள் கலையை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும், விற்பனை சந்தைகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின துறையின் சார்பில் இயங்கி வரும், பழங்குடியின ஆய்வு மையத்தின் இயக்குனர் உதயகுமார்:
பழங்குடியினருக்கான வாழ்வாதாரத்தை பெருக்குவது தான், இந்த மையத்தின் நோக்கம்.
அந்த வகையில், பழங்குடியின மக்களால் உருவாக்கப்படும் பொருட்களை, விற்பனை சந்தைகள் வாயிலாக விற்பனை செய்கிறோம்.
இங்கு வருகை தரும் சிறப்பு விருந்தினர்கள், அரசு விருந்தினர்களுக்கு பழங்குடியினரால் செய்யப்படும் கலைப்பொருட்களை அவர்களிடமிருந்தே கொள்முதல் செய்து, நினைவுப்பரிசாக வழங்கி வருகிறோம்.
அவர்களின் நலனுக்காக இன்னும் பல்வேறு திட்டங்களை, அடுத்தடுத்து செயல்படுத்தவும் திட்டமிட்டு வருகிறோம்.
அந்த வகையில், சுற்றுலா பயணியர் வருகை தரும் இடங்களில், பழங்குடியினரின் கலைப் பொருட்களுக்கான பிரத்யேக விற்பனை அங்காடிகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
அவற்றில், குறும்பா ஓவியங்களும் விற்பனைக்கு இடம்பெறும். பழங்குடி கலைகள் மிகவும் முக்கியமானது; அவை அழிந்துவிடாமல் பாதுகாக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.
***********************எங்கள் ஓவியங்களை விற்பனை செய்யசந்தைகள் வேண்டும்!
குறும்பா பழங்குடியின மக்களின், அழிந்து வரும் குறும்பா ஓவியத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள, சோபியா:
எங்கள் சமூகத்தில் படிக்கிற பசங்க, பிளஸ் 2 வகுப்பை தாண்டினாலே பெரிய விஷயம். அப்படியே முடித்தாலும் வேலைக்கு செல்வதும் ரொம்ப சிரமம். சிறு வயதிலேயே அனைவருக்கும்
திருமணமாகி குழந்தை இருக்கும். வேலைக்கு போகாமல், வருமானம் இல்லாமல், வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் இருந்தபோது தான், இந்த ஓவியக்கலையை கையில் எடுத்தோம்.
என்ன தான் இது எங்களின் பாரம்பரிய ஓவியமாக இருந்தாலும், எங்கள் ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியம், கிருஷ்ணன் தான் எங்களுக்கு இதை முறையாக கற்றுக் கொடுத்தனர். அதற்கு பின்
தான் இதன் வரலாறும், சிறப்பும் புரிந்தது. எங்கள் மூதாதையர்கள் வரைந்த பாறை, குகை ஓவியங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தும் இருக்கு.
இந்த ஓவியங்களில் உறையும் காட்சிகள் முழுக்க, எங்கள் குறும்பா மக்களோட வாழ்வும், கலாசாரமும் தான். நாங்கள் தற்போது வரைந்து கொண்டிருப்பது அதன் தொடர்ச்சி.
எங்களது முன்னோர், வேங்கை மரத்தின் பாலில் செய்த இயற்கை வண்ணங்கள் பயன்படுத்தி வரைந்தனர். நாங்கள் வேங்கைமர பால் வண்ணங்களுடன், 'அக்ரிலிக்' பெயின்ட் பயன்படுத்துகிறோம். இயற்கை வண்ணங்களை
உருவாக்கவும் நிறைய முயற்சி செய்து வருகிறோம்.
ஓவியம் வரைய அரசு இட வசதி செய்து கொடுத்தால் உதவியாக இருக்கும். மேலும், எங்கள் ஓவியங்களை விற்பனை செய்யவும், எங்கள் கலையை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும், விற்பனை சந்தைகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின துறையின் சார்பில் இயங்கி வரும், பழங்குடியின ஆய்வு மையத்தின் இயக்குனர் உதயகுமார்:பழங்குடியினருக்கான வாழ்வாதாரத்தை பெருக்குவது தான், இந்த மையத்தின் நோக்கம். அந்த வகையில், பழங்குடியின மக்களால் உருவாக்கப்படும் பொருட்களை, விற்பனை சந்தைகள் வாயிலாக விற்பனை செய்கிறோம்.
இங்கு வருகை தரும் சிறப்பு விருந்தினர்கள், அரசு விருந்தினர்களுக்கு பழங்குடியினரால் செய்யப்படும் கலைப்பொருட்களை அவர்களிடமிருந்தே கொள்முதல் செய்து, நினைவுப்பரிசாக வழங்கி வருகிறோம்.
அவர்களின் நலனுக்காக இன்னும் பல்வேறு திட்டங்களை, அடுத்தடுத்து செயல்படுத்தவும் திட்டமிட்டு வருகிறோம். அந்த வகையில், சுற்றுலா பயணியர் வருகை தரும் இடங்களில், பழங்குடியினரின் கலைப் பொருட்களுக்கான பிரத்யேக விற்பனை அங்காடி
களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.அவற்றில், குறும்பா ஓவியங்களும் விற்பனைக்கு இடம்பெறும். பழங்குடி கலைகள் மிகவும் முக்கியமானது; அவை அழிந்துவிடாமல் பாதுகாக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.