தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ குப்பைக்கு செல்வதை தடுக்கிறோம்!

குப்பைக்கு செல்வதை தடுக்கிறோம்!

குப்பைக்கு செல்வதை தடுக்கிறோம்!


PUBLISHED ON : ஆக 03, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 03, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குப்பைக்கு செல்வதைதடுக்கிறோம்!



குப்பைக்கு செல்லும் துணிகளை, மறுசுழற்சி வாயிலாக பயனுள்ள பொருட்களாக மாற்றும், மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்த ஜனனி ஆஷிதா: கோவையில், பி.டெக்., பேஷன் டெக்னாலஜியும், கேரள மாநிலம்,

கண்ணுாரில், 'பேஷன் மேனேஜ்மென்ட்' முதுநிலை படிப்பும் முடித்தேன். திருமணமாகி, திருமங்கலத்துக்கு வந்து விட்டேன்.உலகம் முழுக்க அதிக மாசுபாடுகளை ஏற்படுத்தும் துறைகளில், முக்கியமானது டெக்ஸ்டைல் துறை. வாங்கும் திறன் அதிகரித்திருப்பதால், மக்கள் அதிகமான ஆடைகளை வாங்குகின்றனர். அதேபோல் அதிகமான துணிகள் குப்பைக்கும் செல்கின்றன. அதில் ஒரு சின்ன மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று துவங்கியது தான், 'பரிணம்' என்ற, 'ஸ்டார்ட்அப்' நிறுவனம். கழிவுக்கு செல்லும் துணிகளை மறுசுழற்சி வாயிலாக, பயனுள்ள பொருட்களாக மாற்றுவது தான் பிசினஸ் ஐடியா.

கணவர், மதுரையில் கார்மென்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

அங்கு துணியை வெட்டும்போதும், புது ஆடைகளை தைக்கும்போதும் வீணாகும் துண்டு துணிகள், குறைபாடுகள் இருக்கு என்று நிராகரிக்கப்படுகிற புது ஆடைகள் என, எல்லாவற்றையும் சேகரித்து, அதில் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்கிறோம்.'காயின் பவுச், பர்ஸ், லேப்டாப் கவர்' என, பல பொருட்களை தயாரித்து வருகிறோம். குழந்தைகளுக்கான பை, டயாப்பர் பை, ஸ்கேட்டிங் ஷூ பேக்,

சமையலறையில் பயன் படுத்தும் பொருட்களுக்கான கவர்களையும் செய்து கொடுக்கிறோம்.'மறுசுழற்சி செய்தது...' என சொல்லும்போதே, யாரோ பயன்படுத்திய துணிகளில் இருந்து தயாரித்தது என நினைக்கின்றனர். 'வீணான துணிகளில் தானே தயாரிக்கிறீங்க... அப்புறம் ஏன் இவ்ளோ விலை வைக்குறீங்க?' என்றும்

கேட்கின்றனர். அதற்கான டிசைனிங்கில் இருந்து, தயாரிப்புக்கு ஆகும் செலவுகள் குறித்து யோசிக்க மாட்டார்கள்.அவர்களிடம், 'இது யாரும் பயன்படுத்தியது இல்லை. இதுவும் புது துணி தான்' என்று புரிய வைப்பதே பெரிய சவால். 30 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை எங்களிடம் பொருட்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு முறை மறுசுழற்சி செய்த பொருட்களை வாடிக்கையாளரிடம் கொடுக்கும்போதும், 'குப்பைக்கு செல்வதை தடுத்து விட்டோம்' என்ற மனநிறைவு கிடைக்கும்.அந்த பொருட்களின் பயன்பாடு முடிந்ததும், மீண்டும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் பொருளாக மாற்ற வேண்டும் என்ற யோசனையும் இருக்கிறது. அதற்கு, பெரிய முதலீட்டில் மறுசுழற்சி, 'பிளான்ட்' உருவாக்க வேண்டும். இதே மாதிரி ஐடியா இருப்பவர்களுடன் சேர்ந்து, 'பிசினஸ்' செய்யவும் தயாராக இருக்கிறேன்.

2.50 லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்!


புளிச்சகீரை தண்டு வாயிலாக ஆண்டுக்கு, 60 லட்சம், 'நாப்கின் பேடு'கள் தயாரித்து, பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும், கோவையைச் சேர்ந்த, 'பிலிஸ் நேச்சுரல்' நிறுவனத்தின் உரிமையாளர்களான நிவேதா - கவுதம்:

நிவேதா: கவுதமும், நானும் கல்லுாரி நண்பர்கள். கல்லுாரி இறுதி ஆண்டில், தேசிய அளவில் ஒரு போட்டி அறிவித்தனர். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது குறித்து, 'பேப்பர் பிரசன்ட்' செய்யணும் என்று! அதற்காக, ஆய்வு செய்ய துவங்கும்போது தான், நாப்கினில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக இருப்பது தெரிய

வந்தது.அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து, ஒரு தொண்டு நிறுவனம் எங்கள் கல்லுாரிக்கு வந்து, 'புளிச்சகீரை தண்டை வைத்து ஏதேனும் செய்ய முடியுமா?' என்று கேட்டது. நாங்கள் புளிச்சகீரை நாரை வைத்து துணி தயாரித்தோம்; அதற்கு ஈரத்தை உறிஞ்சும் தன்மையும், நுண்ணுயிரிகளை கொல்லும் திறனும் இருந்ததை கண்டுபிடித்தோம். அப்போது தான், இதை வைத்து நாப்கின்

தயாரிக்கும் யோசனை வந்தது.

நெசவு செய்த துணியை அப்படியே நாப்கினாக மாற்றி, ரிசர்ச் பேப்பருடன் சேர்த்து அனுப்பினோம்; தேசிய விருதுக்கு எங்கள் பேப்பர் தேர்வானது. இதையே ஒரு தொழிலாக எடுத்து செய்தால் என்ன என்று யோசித்து, நிறுவனத்தை துவங்கி, 2018ல் மார்க்கெட்டிங்கை ஆரம்பித்தோம்.கவுதம்: மூலப்பொருளை வாங்கி, 'அவுட்சோர்சிங்'கில் நாப்கின் செய்து வாங்கினோம். கோவையில் ஒரு எக்ஸ்போ நடந்தது. அதில் ஒரு ஸ்டால் அமைத்தோம். அங்கு மட்டும், 1,000 வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்.

அதில், 80 சதவீதத்தினர் மீண்டும் போன் செய்து, நாப்கின் வாங்கினர். அதுதான் எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது.அடுத்து, 'வெப்சைட் டிசைன்' செய்தோம். சமூக வலைதளங்களில் பதிவிட்டோம்; ஆர்டர் கிடைத்தது. 2019 - 2020ல் எங்கள் வருவாய், 22 லட்சம் ரூபாய். 2020ல், 10,000 சதுர அடிக்கு அலுவலகம் அமைத்தோம். படிப்படியாக, 50 பேரை வேலைக்கு எடுத்தோம்.

தற்போது, அமெரிக்கா, கனடா, மலேஷியா, நியூசிலாந்து, மொரீஷியஸ் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். இதுதவிர, வாடிக்கையாளர்களுக்கே பொருளை கொடுத்து, விற்பனையாளராக மாற்றினோம்.

தமிழகம் முழுக்க ஆர்கானிக் சூப்பர் மார்க்கெட்டில் எங்கள் தயாரிப்புகள் கிடைக்கும். இப்போது எங்களுக்கு, 2.50 லட்சம் தொடர் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

தொடர்புக்கு: 94878 43699, 94868 62061

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us