/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
விடாமுயற்சி இருந்தால் சாமானிய பெண்களும் சாதனையாளர் ஆகலாம்!
/
விடாமுயற்சி இருந்தால் சாமானிய பெண்களும் சாதனையாளர் ஆகலாம்!
விடாமுயற்சி இருந்தால் சாமானிய பெண்களும் சாதனையாளர் ஆகலாம்!
விடாமுயற்சி இருந்தால் சாமானிய பெண்களும் சாதனையாளர் ஆகலாம்!
PUBLISHED ON : பிப் 22, 2026 12:47 AM

'ஆதிஷா
நேச்சுரல்ஸ்' என்ற பெயரில், சுய தொழிலில் அசத்தும், கடலுார் மாவட்டம்,
கூடலுார் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான, 33 வயது
தமிழரசி:
வறுமை காரணமாக என் தந்தை, தனக்கு சாத்தியமாகாத கல்வி,
தன் பிள்ளைகளுக்கு கட்டாயம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
அதுதான், என்னை பொறியியல் பட்டதாரி ஆக்கியது.
கல்லுாரியில்
படித்துக் கொண்டிருந்தபோதே எனக்கு திருமணம் ஆனது. கணவர் போதுமான வருமானம்
கிடைக்காததால், வேலை தேடி வெளிநாடு சென்றார்.
திருமணத்துக்கு
பிறகும் நான் படிப்பை தொடர கணவரும், தந்தையும் பெரும் ஆதரவாக இருந்தனர்.
உடல்நலக் குறைவால் திடீரென என் அப்பா இறந்து விட்டதால், ஊருக்கு
திரும்பினார் கணவர்.
எங்களுக்கு சொந்தமான, 10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்தபடியே, கால்நடை தீவனம் விற்பனையை ஆரம்பித்தார் கணவர்.
நான், மாதவிடாய் கால அவதிகளால் சிரமப்பட்டேன். கடைகளில் கிடைக்கும் ரசாயன
நாப்கின்களே என் பிரச்னைகளுக்கு காரணம் என்றும் இயற்கை நாப்கின்களுக்கு
மாறும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
சுத் தமான பஞ்சால்
தயாரிக்கப்பட்ட, இயற்கை நாப்கின்கள் மார்க்கெட்டில் கிடைப்பது தெரியவந்தது.
அவற்றை பயன்படுத்த ஆரம்பித்த சில மாதங்களிலேயே என் பிரச்னைக்கு தீர்வு
கிடைத்தது.
என்னை போல கஷ்டப்படுகிற மற்ற பெண்களுக்கும் அத்தகைய நாப்கின்கள் கிடைக் க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
கையில் இருந்த, 3,000 ரூபாய் முதலீட்டில், நாப்கின் முகவர் உரிமையை
எடுத்து, என் வணிக பயணத்தை ஆரம்பித்தேன். கிராமப்புற பெண்களிடம் நாப்கின்
குறித்து பேசுவதே சவாலாக இருந்தது.
பெண்களிடம் கருப்பை ஆரோக்கியம்
மற்றும் நாப்கின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். மெல்ல
அவர்களுக்கு என் மீது நம்பிக்கை வந்து, என் தயாரிப்புகளை தேடி வர
ஆரம்பித்தனர்.
நாப்கின் விற்பனையில் கிடைத்த நம்பிக்கையை தொடர்ந்து, அடுத்து பாரம்பரிய உணவு பொருட்களை மதிப்புக்கூட்டி விற்க துவங்கினேன்.
இ தற்கு முறையான பயிற்சிகளை பெற்று, இன்று, 12 வகையான ஊட்டச்சத்து
பானங்கள், சத்துமாவு வகைகள் மற்றும் டீ வகைகள் என, 40க்கும் மேற்பட்ட
பொருட்களை தயார் செய்து வருகிறேன். என் தயாரிப்புகள் கே ரளா, ஆந்திரா
மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன.
நாப்கி ன்கள் விற்பனை மூலம், 10 லட்சம் ரூபாய், உணவு பொருட்கள் வாயிலாக, 20
லட்சம் ரூபாய் என ஆண்டுக்கு, 30 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறேன்.
செலவுகள் போக மாதம், 75,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.
பெண்கள் எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டவர்கள். விடாமுயற்சியும், சரியான
திட்டமிடுதலும் இருந்தால், சாமானிய பெண்களும் சாதனையாளர்கள் ஆகலாம்.
தொடர்புக்கு: 93843 07421
****************************
நீலகிரியிலிருந்து வெளிநாடுகளில் விற்கும் துணி பொம்மைகள்!
அமைதி மற்றும் நிதானமான வாழ்க்கையை தேடி, கைநிறைய சம்பளம் தந்த வேலையை துறந்து, 'நிலா த குட் டால்' என்ற நிறுவனம் வாயிலாக, துணிகளில் பொம்மைகள் செய்து, விற்பனை செய்து வரும், நீலகிரியை சேர்ந்த சுனிதா சுஹாஸ் - - சுஹாஸ் ராமேகவுடா தம்பதி:
சுனிதா சுஹாஸ்: நாங்கள் இருவரும், தகவல் தொழில்நுட்ப துறையில் தலைமை பொறுப்பில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துள்ளோம். ஒரு கட் டத்தில் அது அலுப்பை தர வே, நீலகிரி வந்துவிட்டோம்.
இங்கு வந்தபோது, பொம்மை வியாபாரம் செய்யணும் என்று திட்டமிட்டு வரவில்லை. சுற்றி இருக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர நினைத்தோம்.
முதலில் கைவினை பொருட்களை செய்ய ஆரம்பித்தோம். இதன்படி, பிறந்த குழந்தைக்கான சிறு மெத்தையும், அதில் ஒரு துணி பொம்மையும் வைத்து கொடுத்தோம்.
மெத்தை சரியாக வியாபாரம் ஆகவில்லை; ஆனால், பொம்மைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
இதனால், நிறுவனம் துவங்கி, பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டோம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்களை நினைவுபடுத்தும் விதமாக, எங்கள் நிறுவனத்துக்கு நிலா என்று பெயர் வைத்தோம்.
துணி பொம்மைகள் பாதுகாப்பானவை; குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. சுற்றுச்சூழலுக்கும் ஏற்றவை என்பதால், துணி பொம்மைகள் தயாரிக்க ஆரம்பித்தோம்.
2023ல், 2 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கிய இந்த தொழில், இன்று ஆண்டுக்கு, 2.50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் அ ளவுக்கு வளர்ந்துள்ளது.
பணத்தை தாண்டி மிகப்பெரிய வெற்றி என்றால், இது பெண்களின் முன்னேற்றம். நீலகிரியை சேர்ந்த 100க்கும் அதிகமான கிராம பெண்களுக்கும், பழங்குடி பெண்களுக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கிறோம்.
சு ஹாஸ் ராமேகவுடா : இங்குள்ள பலர், முதல் தலைமுறையாக வேலைக்கு வருகின்றனர். எங்கள் தொழில் வாயிலாக இந்த பெண்களுக்கு நிதி சுதந்திரமும், தன்னம்பிக்கையும் கிடைத்துள்ளது.
மலையில் இருந்தபடி, வெளிநாடு வரை எங்கள் தயாரிப்புகளை கொண்டு சேர்ப்பது மிகவும் கஷ்டம்; அதையும் சாதித்து உள்ளோம்.
இங்குள்ள மக்களுக்கு பொம்மைகள் செய்ய பயிற்சி கொடுப்பதில் இருந்து, தரத்தை தக்க வைப்பது வரை நிறைய சவால்களை சந்தித்தோம்.
பொம்மைகளை வாங்கும் பெற்றோர், அவற்றை பயன்படுத்தும் குழந்தைகள் என, இரண்டு தரப்பின் தேவைகளையும் புரிந்து கொண்டதால் நாங்கள் ஜெயித்தோம்.
அடுத்து, கதை புத்தகங்கள் மற்றும் காணொளி வாயிலாக, எங்கள் பொம்மைக ளை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் கனவு இருக்கிறது.
தொடர்புக்கு:
81221 60020.

