/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
உப்பு கண்டத்தை எட்டு மாதம் வரை வைத்து சாப்பிடலாம்!
/
உப்பு கண்டத்தை எட்டு மாதம் வரை வைத்து சாப்பிடலாம்!
உப்பு கண்டத்தை எட்டு மாதம் வரை வைத்து சாப்பிடலாம்!
உப்பு கண்டத்தை எட்டு மாதம் வரை வைத்து சாப்பிடலாம்!
PUBLISHED ON : நவ 06, 2024 12:00 AM

உப்பு கண்டம் பிசினசில் கலக்கும், மதுரையைச் சேர்ந்த ஷர்மிளா பானு: நான் பிறந்து வளர்ந்தது, திருமணம் செய்து கொண்டது என எல்லாமே மதுரை தான். பி.இ., பேஷன் டெக்னாலஜி படிச்சேன்; வேலைக்கு போகலை. என் கணவருக்கு துபாயில் வேலை கிடைக்க, அவர் கூட நானும் போனேன்.
சில ஆண்டுகளில் தமிழகத்துக்கே திரும்பி, மீண்டும் மதுரை வாசம். அப்போது என்னிடம் பெரிய அளவு சேமிப்பும் இல்லை; வருமானமும் சரியாக அமையவில்லை. இதனால என் கணவர், தன் குடும்பத்தினரோட கறிக்கடை பிசினசை பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார்.
என் கணவர் கறிக்கடைக்கு போயிட்டு வரும்போது, வீட்டுக்கு உப்புக் கண்டம் போட, 'பிரெஷ்'ஷான கறியா எடுத்து வருவார். நான் போடுற உப்புக் கண்டத்தை, உறவினர்கள், நண்பர்கள் தங்களுக்கும் செய்து கொடுக்கச் சொல்லி கேட்பாங்க; கொடுப்பேன். அப்போதுகூட, இதை பிசினசா மாற்றும் ஐடியா வரவில்லை.
என் கணவர், நான் செய்ற உப்புக் கண்டம் பத்தி, அவரோட, யு டியூப் சேனலில் ஒருமுறை பகிர, அதைப் பார்த்த பலரும், 'எங்களுக்கும் உப்புக் கண்டம் வேண்டும்' என கேட்டனர். அப்போதுதான், இதையே பிசினசாக செய்யலாம் என்று தோன்றியது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், கணவர் பெயரில் உப்புக் கண்டம் பிசினஸ் ஆரம்பித்தேன். அதாவது, 4 கிலோ ஆட்டுக்கறியை நல்லா காய வைத்தால், 1 கிலோ உப்புக் கண்டம் கிடைக்கும். மாதத்திற்கு, 10 கிலோ உப்புக் கண்டம் போட்டேன்; போட போட தீர்ந்து விடும்.
அந்தளவுக்கு எங்கள் உப்புக் கண்டம் எல்லாரிடமும் சிறப்பானதற்கு காரணம், நாங்கள்அதற்கு தேர்ந்தெடுக்கும் கறி தான். நல்ல இளம் ஆட்டுக்கறியை எலும்பில்லாமல் எடுத்து, தேவையான அளவில், 'கட்' செய்து, அதில் மஞ்சள் துாள், உப்பு சேர்த்து நன்றாக காய வைத்து எடுப்போம்.
இந்த வழக்கமான முறையைத் தாண்டி, காரம் துாக்கலான உப்புக் கண்டம், இஞ்சி, பூண்டு பேஸ்ட் கலந்த உப்புக் கண்டம் என, அதில் சில 'பிளேவர்'களை அறிமுகப்படுத்தினேன்; அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
எங்கள் உப்புக் கண்டத்தை எட்டு மாதம் வரை வைத்து சாப்பிடலாம்; கெட்டுப்போகாது.
சமூக வலைதள விளம்பரங்களால் பரவலாக ஆர்டர்கள் கிடைக்க, தற்போது மதுரை மட்டுமல்லாமல், தமிழகம் முழுக்க கூரியர் வாயிலாக விற்பனை செய்கிறோம். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலும் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
உணவு பாதுகாப்பு துறையின், எப்.எஸ்.எஸ்.ஐ., சான்றிதழ் வாங்கி உள்ளோம். ஆண்டுக்கு, 50 லட்சம் ரூபாய் வரை, 'டர்ன் ஓவர்' செய்கிறோம். அடுத்ததாக, உப்புக் கண்டம் ஊறுகாய் தயாரிப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

