/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி ஊராட்சி அலுவலக நுழைவாயில் சேதம்
/
புகார் பெட்டி ஊராட்சி அலுவலக நுழைவாயில் சேதம்
ADDED : மார் 05, 2025 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சி 114.5 ஹெக்டேர் பரப்பில் உள்ளது. இங்கு 9 வார்டுகளில், 187 தெருக்களில், 8500 நபர்கள் வசிக்கின்றனர்.
இங்கு, ஊராட்சி அலுவலகக் கட்டடத்தின் முகப்பு நுழைவாயில் சறுக்கு பாதை சேதமடைந்த நிலையில் உள்ளது.
வரி செலுத்த மற்றும் இதர தேவைக்காக ஊராட்சி அலுவலகம் வரும் முதியோர் பெண்கள் சேதமடைந்துள்ள சறுக்கு பாதையில் கால் இடறி கீழே விழுகின்றனர். எனவே, சேதமடைந்த சறுக்கு பாதையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.லீலாவதி, காயரம்பேடு.