/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி அணுகு சாலையில் மரண பள்ளம்
/
புகார் பெட்டி அணுகு சாலையில் மரண பள்ளம்
ADDED : மார் 10, 2025 11:36 PM

அணுகு சாலையில் மரண பள்ளம்
வண்டலுாரிலிருந்து மீஞ்சூர் செல்லும், 62 கி.மீ., நீளமுள்ள வெளிவட்டச் சாலையை, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பராமரிக்கிறது.
இந்த சாலையில், வண்டலுார் துவக்கத்தில், மண்ணிவாக்கம் செல்லும் அணுகுசாலையில், வடிகால் வசதியுடன் கூடிய நடைபாதை உள்ளது.
இந்த நடைபாதையில், தரமற்ற வகையில் இணைக்கப்பட்டுள்ள சிமென்ட் சட்டங்கள் பல இடங்களில் பெயர்ந்தும், விலகியும் உள்ளன. சில இடங்களில் முற்றிலுமாக விலகி, மரண பள்ளங்களாகவும் உள்ளன. நடைபாதையில் நடந்து செல்வோர், இந்த மரண பள்ளத்தில் விழுந்து, உயிர்பலி நிகழவும் வாய்ப்புள்ளது.
எனவே, உயிர்பலி நிகழும் முன், ஆங்காங்கே பெயர்ந்தும், விலகியும் உள்ள சிமென்ட் சட்டங்களை முறையாக இணைத்து, விபத்தில்லா நடைபாதையாக சீரமைக்க, தமிழக நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம். கதிர்வேல், 55, மண்ணிவாக்கம்.