ADDED : ஜன 20, 2026 04:23 AM

அ நிறம் | அளவு
கூவத்துார் அருகே நெற்குணப்பட்டு ஊராட்சியில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்குள்ள கங்கையம்மன் கோவில் தெருவில் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால், மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் வடிந்து செல்ல இடமின்றி, கங்கையம்மன் கோவில் தெரு முழுதும் குளம் போல தேங்குகிறது.
இதனால், மழைநீரில் மக்கள் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
அதனால், கங்கையம்மன் கோவில் தெருவில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்க வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனந்த் குமார், கூவத்துார்.
