/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; சாலை நடுவே மின்கம்பம் வாகன ஓட்டிகள் அச்சம்

ADDED : பிப் 06, 2025 12:58 AM

சாலை நடுவே மின்கம்பம் வாகன ஓட்டிகள் அச்சம்
மறைமலை நகர் - ஆப்பூர் சாலை 7 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை சட்டமங்கலம், பனங்கொட்டூர், திருக்கச்சூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை, சிங்கபெருமாள் கோவில்- ஸ்ரீ பெரும்புதுார் சாலையின் இணைப்பு சாலை. இந்த சாலையில் சட்ட மங்கலம் பகுதியில் சாலை குறுகலாகவும், சாலை நடுவே மின் கம்பம் உள்ளதாலும், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.
பாளையம், சட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை விரிவாக்கம் செய்யவும், மின் வாரிய அதிகாரிகள் மின் கம்பத்தை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.