/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி ; குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டிற்கு வரவேண்டும்

ADDED : மே 15, 2025 12:26 AM

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டிற்கு வரவேண்டும்
வண்டலுார் ஊராட்சி, ஏரிக்கரை சாலையில், கடந்த 2018ல், எம்.எல்.ஏ., நிதியின் கீழ், 6.50 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதன் வாயிலாக தினமும் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் வீட்டிற்கு தேவையான குடிநீரை பெற்று பயனடைந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, மோட்டார் பழுதானதால், குடிநீர் நிலையம் மூடப்பட்டது. பழுதான மோட்டாரை சரி செய்யும்படி, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும், நடவடிக்கை இல்லை.
தற்போது, கோடை காலத்தில், பகுதிவாசிகளின் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. எனவே, பழுதான மோட்டாரை சரி செய்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.லீலாவதி, வண்டலுார்.