/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் வீண்
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் வீண்
செங்கல்பட்டு: புகார் பெட்டி; குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் வீண்
செங்கல்பட்டு: புகார் பெட்டி; குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் வீண்
ADDED : மார் 06, 2025 01:22 AM

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் வீண்
கூடுவாஞ்சேரியிலிருந்து நெல்லிக்குப்பம் செல்லும் சாலையின் அடிப்பகுதியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், சாலையின் மேற்புரம் வழியாக நீர் வீணாகி சாலையோரம் உள்ள கால்வாயில் கலக்கிறது. இதனால் நாளொன்றுக்கு 5,000 லி., குடிநீர் வீணாகிறது.
தவிர, குழாயிலிருந்து நீர் வெளியேறும் இடத்தில், சாலையில் பள்ளம் உருவாகி உள்ளது. இந்தப் பள்ளத்தில், வாகனங்களின் சக்கரங்கள் ஏறி இறங்குவதால், பள்ளத்தின் பரப்பு அதிகமாகி, போக்குவரத்திற்கும் சிக்கலாகிறது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, சாலையின் அடிப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- - எஸ். செல்லக்குமார், அரசு பஸ் ஓட்டுனர்,
கூடுவாஞ்சேரி.