/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு:புகார் பெட்டி; சேதமடைந்த சிறுபாலம் சீரமைப்பது எப்போது?

ADDED : ஜன 02, 2025 01:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேதமடைந்த சிறுபாலம்
சீரமைப்பது எப்போது?
@@
சித்தாமூர் அடுத்த மாம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட, மாம்பாக்கம் காலனியிலுள்ள மாரியம்மன் கோவில் பின்புறம், குடியிருப்பு பகுதியில் வடிகால்வாயை கடக்கும் சிறுபாலம் உள்ளது.
இந்த சிறுபாலம் வழியாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடந்து செல்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன், சிறுபாலத்தின் நடுவே பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்து உள்ளதால், வாகன ஓட்டிகள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் கவனித்து, சேதமடைந்துள்ள சிறுபாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வ.சங்கர்,
சித்தாமூர்.