
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடியிருப்பில் தேங்கும் மழைநீர்
சூணாம்பேடு அருகே சீர்கேடு
சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பேட்டை கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த மாதம்,'பெஞ்சல்' புயல் காரணமாக, குடியிருப்புப் பகுதியில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், ஒரு மாத காலமாக தண்ணீர் வெளியேற வழியின்றி குடியிருப்புப் பகுதியில் தேங்கி உள்ளதால், கொசு உற்பத்தி அதிகமாகி பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.சரவணன்,
சூணாம்பேடு.

