/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி: பவுஞ்சூரில் சிமென்ட் சாலை புதிதாக அமைக்கப்படுமா?
/
புகார் பெட்டி: பவுஞ்சூரில் சிமென்ட் சாலை புதிதாக அமைக்கப்படுமா?
புகார் பெட்டி: பவுஞ்சூரில் சிமென்ட் சாலை புதிதாக அமைக்கப்படுமா?
புகார் பெட்டி: பவுஞ்சூரில் சிமென்ட் சாலை புதிதாக அமைக்கப்படுமா?
ADDED : ஜன 20, 2025 11:38 PM

பவுஞ்சூரில் சிமென்ட் சாலை
புதிதாக அமைக்கப்படுமா?
பவுஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கடா நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து உள்ளதால், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
மேலும், மழைக் காலத்தில் சாலை நடுவே தண்ணீர் தேங்குவதால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, வெங்கடா நகர் பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.சுந்தர், செய்யூர்.