/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி பட்டுப்போன பழமையான பனைமரம் அகற்றப்படுமா?
/
புகார் பெட்டி பட்டுப்போன பழமையான பனைமரம் அகற்றப்படுமா?
புகார் பெட்டி பட்டுப்போன பழமையான பனைமரம் அகற்றப்படுமா?
புகார் பெட்டி பட்டுப்போன பழமையான பனைமரம் அகற்றப்படுமா?
ADDED : ஜன 23, 2025 12:31 AM

சித்தாமூர் அடுத்த போந்துார் கிராமத்தில் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
சாலையில் இருசக்கர வாகனம், கார், லாரி என, தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
புத்திரன்கோட்டை- போந்துார் இடையே சாலை ஓரத்தில், பழமையான பனைமரம் பட்டுப்போய் உள்ளது. பலத்த காற்று வீசும் போது, இந்த மரம் முறிந்து வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
துறை சார்ந்த அதிகாரிகள் கவனித்து, பட்டுப்போய் உள்ள பனைமரத்தை அகற்ற வேண்டும்.
-தே.தினேஷ், சித்தாமூர்.
குடியிருப்பு அருகே குப்பை
குவிப்பதால் சுகாதார சீர்கேடு
கல்பாக்கம் அருகில், அணுசக்தி துறை ஊழியர்களின் அணுபுரம் நகரிய குடியிருப்பு உள்ளது. இதையொட்டி உள்ள சதுரங்கப்பட்டினம் சாலையில், நெய்குப்பி பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் குப்பை குவிக்கின்றனர்.
இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இப்பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தடுக்கவும், குப்பையை முறையாக சேகரிக்கவும், நெய்குப்பி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.தினேஷ்ராஜ், திருக்கழுக்குன்றம்.
சேதமடைந்த இருக்கைகள்
பஸ் பயணியர் அதிருப்தி
திருப்போரூர் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு, 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு பயணியர் வசதிக்காக அமைக்கப்பட்ட இருக்கைகள் சேதமடைந்து உள்ளன. இதனால், பேருந்திற்காக காத்திருக்கும் முதியவர்கள் உட்பட அனைவரும் சிரமப்படுகின்றனர். எனவே, பேருந்து நிலையத்தில் சேதமடைந்த இருக்கைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.விஜயன், திருப்போரூர்.
சாலையில் தேங்கும் மழைநீர்
கூடுவாஞ்சேரியில் அவதி
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி பேருந்து நிலையம் அருகில், கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் அலுவலகம் உள்ளது. அதன் முன், நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கி, அப்பகுதியில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே, அங்கு தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றி, பொதுமக்கள் சிரமமின்றி சென்று வர, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.செந்தில், குபேரன் நகர்.
உயர்கோபுர மின்விளக்கு
பழுதால் கும்மிருட்டு
மறைமலை நகர் நகராட்சி, பேரமனுார் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில், தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள், பாதசாரிகள் கடந்து செல்கின்றனர்.
இந்த பகுதியில் உள்ள உயர் கோபுர மின் விளக்குகள் பழுதடைந்து உள்ளதால், பொதுமக்கள் வெளிச்சமின்றி சிரமப்படுகின்றனர். எனவே, இந்த உயர் கோபுர மின் விளக்குகளை பழுது நீக்க, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.மணிகண்டன், மறைமலை நகர்
சாலைகள் சேதமானதால்
நெய்குப்பிவாசிகள் தவிப்பு
கல்பாக்கம் அருகில், அணுசக்தி துறையின் அணுபுரம் நகரியத்துடன் ஒருங்கிணைந்த பகுதியாக, நெய்குப்பி ஊராட்சிப் பகுதி உள்ளது. அணுசக்தி துறையினர் வசிக்கும் நகரிய வளாக வெளிப்புறம், ஊராட்சிப் பகுதி உள்ளது.
இங்குள்ள இந்திராகாந்தி நகர் உள்ளிட்ட நகர்ப் பகுதிகளில், நீண்டகாலமாக சாலைகள் பராமரிப்பின்றி சீரழிந்து, குண்டும் குழியுமாக உள்ளன.
இந்திராகாந்தி நகர் பிரதான சாலை, கான்கிரீட், ஜல்லி கற்கள் பெயர்ந்து, விபத்து அபாய பள்ளங்களுடன் உள்ளது.
கழிவுநீர் வெளியேற வழியின்றி, சாலை பள்ளங்களில் தேங்கி, நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மார்க்கெட் உள்ளிட்ட தேவைகளுக்கு இவ்வழியே செல்வோர் அவதிப்படுகின்றனர்.
பிற நகர்ப் பகுதி தெருக்களிலும் சாலை அமைக்கப்படாமல், மண்பாதையே உள்ளது. சீரழிந்த சாலைகளில் புதிய சாலை அமைக்கவும், மண்பாதைகளை சாலையாக மேம்படுத்தவும், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன், நெய்குப்பி.