/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி: சாலைகளில் திரியும் மாடுகள் திருப்போரூர் பகுதியில் பீதி

ADDED : மே 12, 2025 11:54 PM

திருப்போரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அடுக்குமாடி குடியிருப்புகள், புதிய வீட்டுமனை பிரிவுகளால் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன.
இங்கு வசிக்கும் ஏராளமானோர் மாடுகள் வளர்த்து வருகின்றனர்.
இவர்கள், தங்களின் மாடுகளை சாலைகளில் திரியும்படி விட்டு விடுகின்றனர். இதனால் அம்மாடுகள், திருப்போரூர் ரவுண்டானா பகுதி, ஓ.எம்.ஆர்., சாலை, திருப்போரூர் -- திருக்கழுக்குன்றம் சாலை உட்பட பல்வேறு பகுதி சாலைகளில், வாகனங்களுக்கு இடையூறாக கடந்து செல்கின்றன. ஒரு சில மாடுகள் சாலையில் நின்றபடியும், படுத்தும் ஓய்வெடுப்பதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, விபத்துகளும் ஏற்படுகின்றன.
எனவே, ஓ.எம்.ஆர்., உட்பட பல்வேறு சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.கிருஷ்ணமூர்த்தி,
திருப்போரூர்.