/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி: சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் பீதி
/
புகார் பெட்டி: சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் பீதி
புகார் பெட்டி: சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் பீதி
புகார் பெட்டி: சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் பீதி
ADDED : ஏப் 21, 2025 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யூரில் இருந்து தண்ணீர்பந்தல் வழியாக சித்தாற்காடு செல்லும் தார்ச்சாலை உள்ளது.
பாளையூர், தேவராஜபுரம், ஆற்காடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
செய்யூர் - தண்ணீர்பந்தல் இடையே ஏரி உபரிநீர் கால்வாயைக் கடக்கும் சிறுபாலம் சேதமடைந்து, சாலை நடுவே பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
இதனால், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர், இந்த பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.
- ச.வினோத்குமார்,
செய்யூர்.