/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி: சாலை ஓரத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகளுக்கு அபாயம்
/
புகார் பெட்டி: சாலை ஓரத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகளுக்கு அபாயம்
புகார் பெட்டி: சாலை ஓரத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகளுக்கு அபாயம்
புகார் பெட்டி: சாலை ஓரத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகளுக்கு அபாயம்
ADDED : பிப் 10, 2025 11:42 PM
திருப்போரூரில் இருந்து ஓ.எம்.ஆர்., சாலை, தண்டலம் இடையே தினசரி ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இந்த சாலைகளின் இருபுறங்களிலும், சாலையின் நடுவே உள்ள மீடியன் பகுதியிலும் மண் குவியல் அதிகரித்துள்ளது.
வாகனங்கள் செல்லும்போது, மண் குவியல் காற்றில் பறப்பதால், இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். திடீரென கண்களில் விழும் மணலால், சிலர் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. சாலையில் குவிந்துள்ள மண் குவியலை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - எம்.ஜனா, திருப்போரூர்.
-மின்மோட்டார் வசதி
ஏற்படுத்த வேண்டும்
மதுராந்தகம் நகராட்சி 24 வார்டுகளை உள்ளடக்கியது.அதில், 2வது வார்டுக்கு உட்பட்ட மோச்சேரி பகுதி உள்ளது. மோச்சேரி சாலையில், அருணாங்குளம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
அப்பகுதியில், குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.
கோடைக் காலம் நெருங்கி வருவதால், அதை தீர்க்கும் வகையில், நகராட்சி குடிநீர் வழங்கல் நிதியிலிருந்து, ஆழ்துளை கிணறு அமைத்து, மின்மோட்டார் மற்றும் பைப் லைன் வசதி ஏற்படுத்தி தர, நகராட்சி நிர்வாகத்தினர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வி. பால கணேஷ், மதுராந்தகம்.
குப்பையை உடனுக்குடன்
அகற்ற வேண்டும்
ஊரப்பாக்கம் ஊராட்சி பிரியா நகர் நுழைவாயில் பகுதியில், சாலையில் குப்பைகள் அதிகமாக தேங்கியுள்ளது. இதை ஊராட்சி சார்பில் உடனுக்குடன் அகற்றாததால், அதில் கால்நடைகள் மேய்ந்து,
அருகில் உள்ள ஜி.எஸ்.டி., சாலையில் இழுத்து போடுகிறது.
இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்கள் விபத்தில் சிக்குகின்றனர். தேங்கியுள்ள குப்பைகளை ஊராட்சி சார்பில் உடனுக்குடன் அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.
- எஸ்.ராமச்சந்திரன், ஊரப்பாக்கம்.

