/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி : ரயில் நிலைய பாதையில் குவியும் குப்பையால் அவதி
/
புகார் பெட்டி : ரயில் நிலைய பாதையில் குவியும் குப்பையால் அவதி
புகார் பெட்டி : ரயில் நிலைய பாதையில் குவியும் குப்பையால் அவதி
புகார் பெட்டி : ரயில் நிலைய பாதையில் குவியும் குப்பையால் அவதி
ADDED : ஏப் 14, 2025 11:51 PM

ஊரப்பாக்கம் ஊராட்சியின் 10வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், ரயில் நிலையம் செல்லும் சாலை முழுதும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு, சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.
காற்று பலமாக வீசும் போது, குப்பையில் கலந்துள்ள பிளாஸ்டிக் பைகள் ஆகாயத்தில் பறந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் பாதிக்கப்படுகின்றனர்.
தவிர, குப்பையை மொய்க்கும் ஈக்கள், ரயில் நிலையம் அருகில் உள்ள உணவு விடுதிகளுக்கு பறந்து, அங்குள்ள உணவுப் பண்டங்களில் அமர்ந்து, நோயைப் பரப்புகின்றன.
எனவே, ரயில் நிலையம் செல்லும் வழியை சுத்தமாக பராமரிக்க, ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இ.சகாயமேரி,
மேற்கு ஊரப்பாக்கம்.