போந்துார் பஸ் நிறுத்தத்தில் உயர்கோபுர மின்விளக்கு தேவை
போந்துார் பஸ் நிறுத்தத்தில் உயர்கோபுர மின்விளக்கு தேவை
ADDED : பிப் 19, 2026 05:55 AM
அ நிறம் | அளவு
சி த்தாமூர் அடுத்த போந்துார் கிராமத்தில் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ் சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது.
இதை போந்துார், பனையடிவாக்கம், சிறுகளத்துார், தென்னேரிப்பட்டு உள்ளிட்ட கிராம மக்கள் மதுராந்தகம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்குச் செல்ல பயன்படுத்துகின்றனர்.
இந்த பேருந்து நிறுத்தம் இரவு நேரத்தில் போதிய வெளிச்சமின்றி இருளில் மூழ்கி இருப்பதால், பயணியர் சிரமப்படுகின்றனர்.
துறை சார்ந்த அதிகாரிகள் போந்துார் பேருந்து நிறுத்தத்தில் உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.குகன், சித்தாமூர்.
