ADDED : ஜன 20, 2026 04:15 AM
அ நிறம் | அளவு
திருக்கழுக்குன்றம் அருகே முள்ளிக்கொளத்துார் ஈகைமேடு கிராமத்தில், அரசு துவக்கப்பள்ளி உள்ளது.
இப்பள்ளி வளாகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், சமையலறை கூடம் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது இந்த சமையல் கூடம் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. சமையலறை கூடத்திற்கு கதவு இல்லாத நிலையில், பாம்பு, தேள், போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது.
எனவே, வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள், பழைய சமையலறை கூடத்தை இடித்து அகற்ற வேண்டும்.
- கந்தவேலன்,
முள்ளிக் கொளத்துார்.
