/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
உடைந்த குப்பைத்தொட்டி மாற்றி அமைக்கப்படுமா?
/
உடைந்த குப்பைத்தொட்டி மாற்றி அமைக்கப்படுமா?
ADDED : ஜன 20, 2026 04:23 AM

பவுஞ்சூர் அருகே உள்ள நெல்வாய்ப்பாளையம் ஊராட்சியில், 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊராட்சியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கங்கையம்மன் கோவில் தெரு, மாதா கோவில் தெரு, குமார குப்பம், ரேஷன் கடை அருகில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகள், கடந்த ஆறு மாதங்களாக சேதமாகி உள்ளன. அவை துருப்பிடித்தும், உடைந்தும் இருப்பதால், மக்கள் கொட்டும் குப்பை வெளியே சிதறுகிறது.
துாய்மை பணியாளர்கள் காலையில் குப்பையை சேகரித்து சென்றாலும், மற்ற நேரங்களில் கொட்டப்படும் குப்பை காற்றில் பறக்கிறது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
எனவே, உடைந்த குப்பைத் தொட்டிகளை அகற்றி விட்டு, புதிய குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும்.
- சே.சங்கீதா, பவுஞ்சூர்.

