/
புகார் பெட்டி
/
சென்னை
/
நிழற்குடை பணி கிடப்பில் பயணியர் கடும் அவதி
/
நிழற்குடை பணி கிடப்பில் பயணியர் கடும் அவதி
ADDED : செப் 09, 2025 08:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனாம்பேட்டை மண்டலம், கோபாலபுரத்தில் உள்ள கான்ரான் ஸ்மித் சாலையில் இருந்த கான்கிரீட் கட்டுமான பயணியர் நிழற்குடை சேதமடைந்ததால், அது அகற்றப்பட்டது. அங்கு, புதிதாக நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 8 லட்சம் ரூபாய் செலவில் நிழற்குடை அமைக்கும் பணியை மேற்கொண்டனர். நிழற்குடை அமைப்பதற்கான இரண்டு துாண்களை மட்டுமே அமைத்த ஊழியர்கள் அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுவிட்டனர்.
இதனால் பயணியர் வெயிலிலும், மழையிலும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து, நிழற்குடை பணியை முடிக்க வேண்டும்.
- கார்த்திக், கோபாலபுரம்.