/
புகார் பெட்டி
/
சென்னை
/
புகார் பெட்டி: புதர்மண்டிய மின்மாற்றி திருவொற்றியூரில் ஆபத்து
/
புகார் பெட்டி: புதர்மண்டிய மின்மாற்றி திருவொற்றியூரில் ஆபத்து
புகார் பெட்டி: புதர்மண்டிய மின்மாற்றி திருவொற்றியூரில் ஆபத்து
புகார் பெட்டி: புதர்மண்டிய மின்மாற்றி திருவொற்றியூரில் ஆபத்து
ADDED : ஜன 23, 2025 12:16 AM

புதர்மண்டிய மின்மாற்றி திருவொற்றியூரில் ஆபத்து
திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே உள்ள இந்திராகாந்தி நகரில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, சாலையோரம் இரு மின்மாற்றிகளை தாங்கி நிற்கும் கம்பங்கள் உள்ளன.
இந்த மின்மாற்றிகளை முறையாக கவனிக்காமல் விட்டதால், செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால், பழுது ஏற்படும் நேரங்களில் மின்வாரிய ஊழியர்கள், மின்மாற்றியை நெருங்க முடியாத சூழல் உள்ளது.
மேலும், மழைக் காலங்களில் மின்சேவை தடைபட்டால், நிலைமையை சரிசெய்வதில் பிரச்னை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, மின்மாற்றியில் படர்ந்திருக்கும், செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வினோத்,
திருவொற்றியூர்.