/
புகார் பெட்டி
/
சென்னை
/
புகார் பெட்டி குண்டும் குழியுமான ரயில்வே ஸ்டேஷன் சாலை
/
புகார் பெட்டி குண்டும் குழியுமான ரயில்வே ஸ்டேஷன் சாலை
புகார் பெட்டி குண்டும் குழியுமான ரயில்வே ஸ்டேஷன் சாலை
புகார் பெட்டி குண்டும் குழியுமான ரயில்வே ஸ்டேஷன் சாலை
ADDED : ஜன 28, 2025 01:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி அடுத்த பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே, ரயில்வே ஸ்டேஷன் சாலை உள்ளது. பொதுமக்கள், ரயில் பயணியர் இவ்வழியாக தான் தண்டுரை, கோபாலபுரம் மற்றும் சேக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலை, பல மாதங்களாக குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் உள்ளது.
சில இடங்களில் மண் தரையாக காட்சி அளிப்பதால், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள், பெரிதாகும் நிலை உள்ளது.
சேதமடைந்த சாலையால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தேசிங்குராஜா, பட்டாபிராம்