/
புகார் பெட்டி
/
சென்னை
/
புகார் பெட்டி//பள்ளிக்கரணையில் சுகாதார சீர்கேடு
/
புகார் பெட்டி//பள்ளிக்கரணையில் சுகாதார சீர்கேடு
ADDED : பிப் 13, 2025 12:28 AM

பள்ளிக்கரணையில் சுகாதார சீர்கேடு
பள்ளிக்கரணை ஆதிபுரிஸ்வரர் கோவில் தெரு, சிட்டிபாபு நகர், 4வது தெருவின் மைய பகுதியில், 1,000 அடி நீளம், மூன்று அடி அகலத்தில் கால்வாய் உள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன், அணை ஏரியிலிருந்து தாமரைக் குளத்திற்கு நீர் செல்வதற்காக, இந்தக் கால்வாய் அமைக்கப்பட்டது. ஐந்து ஆண்டிற்கு முன், அணை ஏரிக்கும் கால்வாய்க்கும் இடையே உள்ள பகுதி மூடப்பட்டது.
இதனால், கால்வாயில் ஏரி நீர் வருவது தடைபட்டது. தற்போது, கால்வாயின் இருபுறமும் உள்ள சில குடியிருப்புவாசிகள், தங்கள் வீடுகளின் கழிவு நீர் மற்றும் கழிப்பறை நீரை, இந்தக் கால்வாயில் திறந்துவிட்டுள்ளனர். இதனால், கொசு உற்பத்தி மிகுதியாகி, துர்நாற்றம் வீசுகிறது. அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பயன்பாட்டில் இல்லாத இந்த கால்வாயை நிரந்தரமாக மூடுவதற்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- அருள்முருகன், சிட்டிபாபு நகர்.

