/
புகார் பெட்டி
/
சென்னை
/
புகார் பெட்டி/ ஐ.சி.எப்.,பில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு
/
புகார் பெட்டி/ ஐ.சி.எப்.,பில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு
புகார் பெட்டி/ ஐ.சி.எப்.,பில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு
புகார் பெட்டி/ ஐ.சி.எப்.,பில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு
ADDED : ஜன 28, 2025 12:31 AM
அண்ணா நகர் மண்டலம், ஐ.சி.எப்., பகுதியில், வடக்கு, தெற்கு உள்ளிட்ட நான்கு காலனிகள் உள்ளன. இப்பகுதியில், மத்திய அரசின், ஐ.சி.எப்., ரயில்வே தொழிற்சாலையில் பணிபுரியும் பல்நிலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
இங்கு, வடக்கு காலனியில் மட்டும் சமீபகாலங்களாக, தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை நாய்கள் விரட்டுவதால், அவர்கள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். சம்பந்தப்பட்ட பகுதியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த, மாநகராட்சியும், ரயில்வே நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மதன், ஐ.சி.எப்.,