ADDED : செப் 15, 2026 01:13 AM

அ நிறம் | அளவு
பெருங்குடி மண்டலம், நாராயணபுரம், வேளச்சேரி பிரதான சாலையில் 50க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையிலேயே படுத்துக் கிடக்கின்றன.
சாலையின் குறுக்கே மாடுகள் வருவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாகி, காயமடைந்து வருகின்றனர்.
மக்கள் மற்றும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தவுடன், மாடுகளை வீதிகளில் விடும் உரிமையாளர்கள் மீது, அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வம், நாராயணபுரம்
