/
புகார் பெட்டி
/
சென்னை
/
வடிகால்வாய் இல்லாததால் மழைநீர் தேங்கி பாதிப்பு
/
வடிகால்வாய் இல்லாததால் மழைநீர் தேங்கி பாதிப்பு
ADDED : செப் 09, 2025 08:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி, டிரங் சாலையில் நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், நீதிமன்றம், சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. முக்கியமான பகுதியான இங்கு, ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த சாலையில் மழைநீர் வடிகால்வாய் இல்லை. இதனால், சிறுமழை பெய்தாலே சாலையில் குட்டை போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், பூந்தமல்லி வந்து செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்த சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்.
- ஆர்.பிரசாத், பூந்தமல்லி.