/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு சேதம்; விபத்து ஏற்படும் அபாயம்!
/
தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு சேதம்; விபத்து ஏற்படும் அபாயம்!
தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு சேதம்; விபத்து ஏற்படும் அபாயம்!
தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு சேதம்; விபத்து ஏற்படும் அபாயம்!
ADDED : ஆக 03, 2025 09:03 PM

ரோட்டில் 'பார்க்கிங்' பொள்ளாச்சி -- பல்லடம் சாலையில் இருந்து, மகாலிங்கபுரம் செல்லும் வழியில், கடைகள் அருகே இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ரோட்டின் ஓரத்தில், 'பார்க்கிங்' செய்யப்படுகிறது. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, போக்குவரத்துக்கு இடையூறாக 'பார்க்கிங்' செய்யும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டேவிட், பொள்ளாச்சி.
ரோட்டில் பேக்கரி கழிவு பொள்ளாச்சி, வடக்கிபாளையத்தில் நடுப்புணி ரோட்டில் உள்ள தனியார் பேக்கரி கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் பொதுசுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜோதி, வடக்கிபாளையம்.
போக்குவரத்து நெரிசல் கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் பகுதியில், அதிகளவு வாகனங்கள் 'ஒன் வே'யில் பயணிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.
-- ராம்குமார், கிணத்துக்கடவு.
செடிகள் அகற்றப்படுமா? கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறை அலுவலகம் செல்லும் பாதை ஓரத்தில், அதிக அளவு செடிகள் முளைத்துள்ளது. செடிகள் அதிகமாக வளர்ந்து பாதையை ஆக்கிரமிப்பு செய்வதற்குள் உடனடியாக அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
- சந்தோஷ், கிணத்துக்கடவு.
தடுப்பு வைக்கணும்! பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு அருகே 'யு டேர்ன்' பகுதியில், சேதமடைந்த தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் இருப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை போலீசார் கவனித்து உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும்.
-- பெருமாள், கிணத்துக்கடவு.
புகை மண்டலம் உடுமலை நகராட்சி சந்தையில், குப்பையை அப்புறப்படுத்தாமல், அங்கேயே போட்டு தீ வைப்பதால் புகை மண்டலம் போல் காணப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரமேஷ், உடுமலை.
தெருநாய்கள் தொல்லை உடுமலை பாபுகான் வீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் குடியிருப்புகளிலிருந்து கொட்டப்படும் குப்பைக்கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு முன்பாகவே, ரோடு முழுவதும் பரப்பி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது. மேலும், வாகன ஓட்டுநர்களை பகல் நேரத்திலும் துரத்திச்சென்று அச்சுறுத்தலை உண்டாக்குகிறது.
- கணபதி, உடுமலை.
சேதமடைந்த ரோடு உடுமலை, சரவணா வீதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டுநர்கள் ஏற்கனவே அவ்வழியாக செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இந்நிலையில் ரோட்டின் பாதிவரை கட்டுமான பொருட்களை கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் மண் குவியல் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். கனரக வாகனங்கள் வரும்போது ஒதுங்கி செல்வதற்கும் இடமில்லாமல் நெரிசல் ஏற்படுகிறது.
- ராமதிலகம், உடுமலை.
வேண்டும் வேகத்தடை உடுமலை, பழனியாண்டவர் ரவுண்டானா அருகே வாகனங்கள் அதிவேகமாக வந்து திரும்புகின்றன. வேகத்தடை இல்லாததால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதிவேகமாக வரும் வாகனங்கள் திரும்பும்போது கட்டுபாடில்லாமல் அருகில் செல்லும் பாதசாரிகள் மீதும் விடுகின்றனர். அப்பகுதியில் வாகன வேகத்தை கட்டுபடுத்தும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
- சரண்ராஜ், உடுமலை.
'குடி'மகன்கள் தொல்லை உடுமலை, பஸ் ஸ்டாண்ட் பின்புறம், அனுஷம் ரோட்டில் 'குடி'மகன்கள் ரோட்டில் இரவு நேரங்களில் நிலையில்லாமல் தாறுமாறாகச்செல்கின்றனர். இவ்வாறு செல்வதால் வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்லும்போது அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். அப்பகுதியில் வெளிச்சம் குறைவாக இருப்பதால், பெண்கள் மாலை நேரங்களில் அவ்வழியாக செல்ல அச்சப்படுகின்றனர்.
- திருமூர்த்தி, உடுமலை.
ரோட்டில் சந்தை உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சி எஸ்.வி.புரத்தில், வெள்ளிக்கிழமைகளில் ரோட்டோரத்தில் தினசரி சந்தை நடக்கிறது. இதனால் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பதோடு, பொதுமக்களும் சிரமப்படுகின்றனர்.
- கவுதம், உடுமலை.