/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
ஆத்துப்பாலத்தில் ஆங்காங்கே நிறுத்தப்படும் பஸ்கள்; குறிப்பிட்ட இடத்தில் நிறுத்த மக்கள் கோரிக்கை
/
ஆத்துப்பாலத்தில் ஆங்காங்கே நிறுத்தப்படும் பஸ்கள்; குறிப்பிட்ட இடத்தில் நிறுத்த மக்கள் கோரிக்கை
ஆத்துப்பாலத்தில் ஆங்காங்கே நிறுத்தப்படும் பஸ்கள்; குறிப்பிட்ட இடத்தில் நிறுத்த மக்கள் கோரிக்கை
ஆத்துப்பாலத்தில் ஆங்காங்கே நிறுத்தப்படும் பஸ்கள்; குறிப்பிட்ட இடத்தில் நிறுத்த மக்கள் கோரிக்கை
ADDED : ஆக 17, 2025 10:53 PM

பஸ் ஸ்டாப் தெரிவதில்லை கோவை - பொள்ளாச்சி ரோடு, ஆத்துப்பாலம் பஸ் ஸ்டாப்பில், பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால், பயணிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பிட்ட இடத்தில், பஸ்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாலன், போத்தனுார்.
மின் விளக்கு எரிவதில்லை தொண்டாமுத்துார், இக்கரை போளுவாம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே உள்ள மின் கம்பங்களில் விளக்குகள் எரிவதில்லை. இப்பகுதி கும்மிருட்டாக காட்சியளிக்கிறது. மக்கள் அவதிப்படுகின்றனர்.
- ஜெயசந்திரன், தொண்டாமுத்துார்.
கால்நடைகளால் இடையூறு மாநகராட்சி, 99வது வார்டுக்கு உட்பட்ட, கோணவாய்க்கால்பாளையத்தில், சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இவற்றால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.
- குமார், வெள்ளலுார்.
கூடுதல் பஸ்கள் தேவை அவிநாசி ரோடு, சிட்ராவில் இருந்து, சரவணம்பட்டி செல்லும் வழித்தடத்தில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில், காலை - மாலை நேரங்களில், கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.
- சாமிநாதன், சரவணம்பட்டி.
சுகாதார சீர்கேடு ஒண்டிப்புதுார், புது இட்டேரி பகுதியில் சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
- செந்தில்நாதன், ஒண்டிப்புதுார்.
சாலையில் கழிவுநீர் தேக்கம் நல்லாம்பாளையம் ரோடு, மணீஸ் நகர், ஸ்ரீராம் சங்கரி அபார்ட்மென்ட் அருகில், கழிவு நீர் சாலையில் தேங்கியுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது.
- குமார், மணீஸ் நகர்.
போக்குவரத்து நெருக்கடி சத்தி ரோடு, கணபதி - சரவணம்பட்டி ரோட்டில், சாலையோரம் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பள்ளி, கல்லுாரி மற்றும் பணிக்கு செல்வோர் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
- பாபு, கணபதி.
வீணாகும் குடிநீர் காளப்பட்டி, சிவா நகர் சுற்றுப்பகுதிகளில், குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், இப்பகுதியில் உள்ள பிரதான குழாய் உடைப்பால், குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது.
- நித்யானந்தன், சிவா நகர்.
பஸ் ஸ்டாப் இடம் மாற்றணும் கோவை - பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம் பகுதியில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், சுந்தராபுரம் மற்றும் காந்தி நகர் பஸ் ஸ்டாப்களில் அதிகளவிலான நெருக்கடி ஏற்படுகிறது. இந்த பஸ் ஸ்டாப்களை இடம் மாற்றி அமைக்க வேண்டும்.
- ராஜேந்திரன், காந்தி நகர்.