/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் சேதம்; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
/
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் சேதம்; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் சேதம்; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் சேதம்; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
ADDED : ஆக 04, 2025 07:35 PM

ரோட்டோரத்தில் தேங்கும் கழிவு பொள்ளாச்சி, பாரதி வீதியில் கழிவு நீர் கால்வாயில் இருக்கும் கழிவு ரோட்டோரம் கொட்டப்பட்டுள்ளது. இது பல நாட்களாக அகற்றப்படாமல் இருப்பதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் இதை கவனித்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.
-- பெருமாள், பொள்ளாச்சி.
சீரமைப்பது எப்போது? கிணத்துக்கடவு, தினசரி காய்கறி மார்க்கெட் அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் ஆங்காங்கே சேதம் அடைந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள் மிகவும் சிரமத்துடன் பயணிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதை தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் உடனடியாக சரி செய்து தர வேண்டும்.
-- பிரபு, கிணத்துக்கடவு.
வடிகால் அமைக்கணும் பொள்ளாச்சி -- கோவை ரோட்டில், ஆச்சிபட்டி அருகே மழை நீர் செல்ல வடிகால் வசதி இல்லாததால், மழை நீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். இதை அதிகாரிகள் கவனித்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.
-- முத்து, பொள்ளாச்சி.
விபத்து அபாயம் பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் ரயில்வே கேட் அருகே, ரோட்டில் தொடர் வேகத்தடை அமைக்கப்பட்டிருப்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் நிலை தடுமாறி செல்கின்றனர். இதை அதிகாரிகள் கவனித்து உடனடியாக சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- டேவிட், பொள்ளாச்சி.
விதி மீறும் வாகனங்கள் வால்பாறை நகரில் வாழைத்தோட்டம் செல்லும் ரோட்டில், போக்குவரத்துக் இடையூறாக ரோட்டோரங்களில் அதிக அளவு வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அவ்வழியில் பயணிக்கும் பொது மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே போலீசார் இதை கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- கணேசன், வால்பாறை.
பாதாள சாக்கடை மூடி சேதம் உடுமலை,சீனிவாசா வீதியில் பாதாள சாக்கடை குழியின் மூடி சிதிலமடைந்து உள்வாங்கி உள்ளது. அதன் மீது செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு விபத்து ஏற்படுகிறது. மேலும், வாகனங்கள் செல்லும் போது பொதுமக்கள் ஒதுங்கிசெல்வதற்கும் வழியில்லாமல் இடையூறு ஏற்படுகிறது.
- மணிமேகலை, உடுமலை.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு உடுமலை அரசு மருத்துவமனை ரோட்டில் வேன்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. அவ்வழியாக மற்ற வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசர நிலைக்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கு இடையூறாக உள்ளது.
- கண்ணன், உடுமலை.
ராஜவாய்க்காலில் கழிவுநீர் உடுமலை நகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் செயல்படாததால், கழிவுநீர் ராஜவாய்க்காலில் செல்கிறது. இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன், உடுமலை.
சுகாதார சீர்கேடு உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் எஸ்.வி., புரம் பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில் அவ்வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் தெருநாய்கள் அச்சுறுத்தி துரத்தி வருகின்றன. மேலும், ரோடுகளில் கொட்டப்படும் குப்பைக்கழிவுகளை இழுத்து வீடுகளின் முன் பரப்பி விடுவதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
- வேல்குமார், கணக்கம்பாளையம்.
தெருவிளக்குகள் எரிவதில்லை உடுமலை, பழனியாண்டவர் நகரில் சில பகுதிகளில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் உள்ளது. இரவு நேரத்தில் அப்பகுதியில் திருட்டு பயம் அதிகரிக்கிறது. பொதுமக்கள் இரவு நேரத்தில் ரோட்டில் நடந்துசெல்வதற்கும் அச்சப்படுகின்றனர்.
- ராஜேந்திரன், உடுமலை.
திறந்தவெளி கழிப்பிடம் உடுமலை, வெங்கடகிருஷ்ணா ரோட்டில் உள்ள பள்ளி கட்டடம் முன் திறந்தவெளி கழிப்பிடமாக பலரும் அசுத்தம் செய்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் அசுத்தமாகி வருகிறது. இப்பிரச்னையால் அங்குள்ள கடைகளிலும் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது.
- ஜெயகுமார், உடுமலை.
கூடுதல் மேஜை வேண்டும் உடுமலை நாராயணகவி மணி மண்டபத்தில் போட்டித்தேர்வுக்கு படிப்பதற்காக புதிதாக திறக்கப்பட்ட கட்டடத்தில் மேஜை, சேர்கள் இல்லாமல் உள்ளது. இதனால், அங்கு வருவோர் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து நுாலகத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முருகன், உடுமலை.