இந்தியா வழியில் ஆப்கானிஸ்தான்: பாகிஸ்தான் நோக்கி பாயும் நதிகளில் அணை கட்ட ஏற்பாடு
இந்தியா வழியில் ஆப்கானிஸ்தான்: பாகிஸ்தான் நோக்கி பாயும் நதிகளில் அணை கட்ட ஏற்பாடு
UPDATED : அக் 24, 2025 02:29 PM
ADDED : அக் 24, 2025 02:21 PM

காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் ஆற்றில் தண்ணீரை தடுக்கும் வகையில் வகையில் தலிபான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக இந்தியா அறிவித்தது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்த பிறகு, எல்லை தாண்டிய ஆறுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் கிடைப்பதை தடுக்க ஆப்கானிஸ்தான் இப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது எல்லை தாண்டிய மோதலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானும் விரைவில் குனார் ஆற்றில் ஒரு அணை கட்டும் என்று தலிபான் அமைப்பின் தலைவர் மவ்லவி ஹிபதுல்லா தெரிவித்தார்.குனார் ஆற்றில் அணைகள் கட்டுவதை விரைவில் தொடங்கவும், உள்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் தலிபான் அமைப்பின் தலைவர் அறிவுறுத்தியதாக ஆப்கானிஸ்தான் நீர் மற்றும் எரிசக்தி அமைச்சகம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
480 கி.மீ., நீளமுள்ள குனார் நதி, வட கிழக்கு ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைகளில், பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள புரோகில் கணவாய் அருகே உருவாகிறது. இது குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்கள் வழியாக தெற்கே பாய்ந்து பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாயில் கடந்து ஜலாலாபாத் நகருக்கு அருகில் காபூல் நதியில் இணைகிறது. குனார் பாகிஸ்தானில் சித்ரால் நதி என்று அழைக்கப்படுகிறது.
குனார் பாயும் காபூல் நதி, ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான மிகப்பெரிய எல்லை தாண்டிய நதியாகும். தற்போது குனார் மற்றும் காபூல் நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்தும் பணியில் தலிபான் அமைப்பினர் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

