/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் ஆடு, மாடுகள் உலா; விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்
/
ரோட்டில் ஆடு, மாடுகள் உலா; விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்
ரோட்டில் ஆடு, மாடுகள் உலா; விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்
ரோட்டில் ஆடு, மாடுகள் உலா; விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்
ADDED : ஜூலை 13, 2025 08:39 PM

பழுதடைந்த போர்வெல்
நெகமம் அருகே உள்ள தாசநாயக்கன்பாளையத்தில், தனியார் பள்ளி அருகே ரோட்டோரம் உள்ள போர்வெல் குழாய் பழுதடைந்துள்ளது. அப்பகுதி முழுவதும் புதர் மண்டி இருக்கிறது. இதை ஊராட்சி நிர்வாகம் கவனித்து, போர்வெல் குழாயை சீரமைத்து, உடனடியாக புதரை அகற்றம் செய்ய வேண்டும்.
- கார்த்தி, காட்டம்பட்டி.
புதர் அகற்றப்படுமா?
கோதவாடியில் இருந்து, கொண்டம்பட்டி செல்லும் ரோட்டின் ஓரத்தில் அதிகளவு செடிகள் வளர்ந்துள்ளது. இதனால், ரோட்டில் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக, நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் போது, செடிகள் உரசுகிறது. இதை தவிர்க்க ரோட்டோர புதர் செடிகளை அகற்றம் செய்ய வேண்டும்.
-- கண்ணன், கிணத்துக்கடவு.
கால்நடைகளால் தொல்லை
வால்பாறை நகரின் முக்கிய ரோடு பகுதியில், ஆடு மற்றும் மாடுகள் உலா வருவதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி ரோட்டில் சுற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
- -- கணேசன், வால்பாறை.
டயர்களை அகற்றுங்க!
பொள்ளாச்சி, மார்க்கெட் ரோட்டோரம் உள்ள கடைகள் முன் அதிகப்படியான வாகன டயர்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், மழை நேரங்களில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. கொசுத்தொல்லை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் இதை கவனித்து உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.
-- நரேந்திர கண்ணன், பொள்ளாச்சி.
போக்குவரத்து பாதிப்பு
பொள்ளாச்சி, கோட்டூர் பேரூராட்சி ஆழியாறு செல்லும் ரோட்டோரம் தள்ளுவண்டிகள் மற்றும் ஆட்டோக்கள் ரோட்டை ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் பிற வாகனங்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து அபாயம் உள்ளது. ரோட்டை ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மணிவேல், கோட்டூர்.
தடுப்புகள் சேதம்
உடுமலை --- பழநி ரோடு மைவாடி பிரிவு வளைவு ரோட்டின் நடுவே தேசிய நெடுஞ்சாலைதுறையினர் சார்பில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் சேதமடைந்துள்ளது. இதனால், விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, இந்த தடுப்புகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன், உடுமலை.
ரோட்டை சமப்படுத்துங்க
உடுமலை, பசுபதி வீதியில் பாதாள சாக்கடை குழிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவதற்கு ரோடு தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பின், குழிகள் சமமாக மூடப்படாமல் ரோடு பள்ளமாக மாறியுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். கனரக வாகனங்கள் அந்த ரோட்டில் செல்லும்போது பள்ளத்தில் சிக்கிக்கொள்கின்றன.
- ராஜேஸ்வரி, உடுமலை.
குறுகலான ரோடு
உடுமலை-குமரலிங்கம் ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. பஸ் போன்ற வாகனங்கள் செல்லும்போது மற்ற வாகனங்கள் எதிரில் வருவதற்கு வழியில்லாமல் காத்திருந்து வர வேண்டியுள்ளது. இதனால அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- விக்னேஷ், மடத்துக்குளம்.
நாய்த்தொல்லை
உடுமலை, எஸ்.வி.புரம், பி.வி லே-அவுட் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றுகின்றன. அப்பகுதியில் பொதுமக்கள் வாகனங்களில் செல்லும்போது துரத்தி செல்கின்றன. இரவு நேரங்களில் வீடுகளில் முன் சண்டையிட்டுகொள்வதால் பொதுமக்கள் வெளியில் வருவதற்கும் அச்சப்படுகின்றனர்.
- சந்திரசேகர், உடுமலை.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, பஸ் ஸ்டாண்ட் எதிரே கார்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். போக்குவரத்து காவல்துறையினர் அருகில் இருந்தும் தொடர்ந்து இவ்வாறு வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் பொதுமக்கள் நடுரோட்டில்தான் நடந்துசெல்ல வேண்டியுள்ளது. பாதி ரோடு வரை வாகனங்கள் நிற்பதால் பஸ் ஸ்டாண்ட் வருவதற்கு ரோட்டை கடப்பதற்கும் சிரமப்படுகின்றனர்.
- பாலகிருஷ்ணன், உடுமலை.
செடிகளை அகற்றுங்க
உடுமலை அரசு கலைக்கல்லூரிக்கு செல்லும் ரோட்டின் ஓரங்களில், செடிகள் வளர்ந்து அகற்றப்படாமல் உள்ளது. இதனால், இந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இச்செடிகளை அகற்ற உள்ளாட்சி அமைப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வராஜ், உடுமலை.