/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
விற்பனைக்கான வாகனங்களை நடுரோட்டிலா நிறுத்துவது? நஞ்சப்பா ரோட்டில் ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்ட ஆளில்லை
/
விற்பனைக்கான வாகனங்களை நடுரோட்டிலா நிறுத்துவது? நஞ்சப்பா ரோட்டில் ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்ட ஆளில்லை
விற்பனைக்கான வாகனங்களை நடுரோட்டிலா நிறுத்துவது? நஞ்சப்பா ரோட்டில் ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்ட ஆளில்லை
விற்பனைக்கான வாகனங்களை நடுரோட்டிலா நிறுத்துவது? நஞ்சப்பா ரோட்டில் ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்ட ஆளில்லை
ADDED : ஆக 10, 2025 10:35 PM

சிக்கும் வாகனங்கள் ஜி.என்.மில்ஸ், சுப்பிரமணியம்பாளையத்தில் சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. சாலை முழுவதும் பள்ளங்களாக உள்ளது. சரக்கு வாகனங்கள் சாலையில் அடிக்கடி சிக்கிக்கொள்கின்றன. போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
- விக்னேஷ், ஜி.என்.மில்ஸ்.
ஒருபுறம் படுமோசம் வீரகேரளம் அருகே, தொண்டாமுத்துார் ரோட்டில், குழாய் பதிப்பு பணிகளுக்காக சாலையின் ஒருபுறம் தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பின்பு மீண்டும் சாலை அமைக்கவில்லை. மண்ணாகவும், மேடு, பள்ளமாகவும் உள்ளது.
- உண்ணிகிருஷ்ணன், வீரகேரளம்.
தெருவிளக்கு பழுது சரவணம்பட்டி, ஒன்பதாவது வார்டு, 'எஸ்.பி -57. பி-1' என்ற எண் கொண்ட கம்பத்தில் அடிக்கடி தெருவிளக்கு பழுதாகிறது. அருகிலுள்ள கம்பத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக தெருவிளக்கு எரிவதில்லை. பழுதான தெரு விளக்குகளை மாற்றி, புதிய விளக்குகளை பொருத்த வேண்டும்.
- சவுந்தர்ராஜன், சரவணம்பட்டி.
குப்பைமயமான பேருந்து நிலையம் மருதமலை அடிவாரம் பேருந்து நிலையம், போதிய பராமரிப்பின்றி மோசமாக உள்ளது. அதிக குப்பை தேங்கிக்கிடக்கிறது. வாரக்கணக்கில் தேங்கியுள்ள கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
- ஹரிதாஸ், மருதமலை.
பெயர்ந்து வரும் ஜல்லிக்கற்கள் காரமடை, ஜடையம்பாளையம், ராமம்பாளையத்தில் இருந்து பாரத் வித்யா நிகேதன் பள்ளி வழியாக சென்னம்பாளையம் நகர் செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக இருக்கிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
- கந்தசாமி, காரமடை.
வாய்க்காலில் பிளாஸ்டிக் அடைப்பு வீரகேரளம் பிரதான கால்வாயில் உள்ள மழைநீர் வாய்க்காலில், பெருமளவு பிளாஸ்டிக் கழிவு குவிந்துள்ளது. கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மழைக்காலத்தில் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.வாய்க்காலை சுத்தம் செய்வதுடன், இங்கு குப்பை வீசுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- உண்ணிகிருஷ்ணன், வீரகேரளம்.
எரிக்கப்படும் குப்பை மத்வராயபுரம் ஊராட்சியில், ஆற்றுக்கு செல்லும் பாதையில் குப்பை குவிந்துள்ளது. அடிக்கடி குப்பையை தீ வைத்து எரிப்பதால், அருகில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கு மூச்சுத்திணறல், கண்ணெரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
- சுப்பிரமணியன், மத்வராயபுரம்.
பள்ளி முன் இடையூறு நஞ்சப்பா ரோட்டில், மாநகராட்சி பள்ளி அருகே செயல்படும், எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனம், விற்பனைக்கானவாகனங்களை சாலையில் நிறுத்தி வைக்கிறது. பாதசாரிகள் நடந்து செல்ல வழியில்லை. பள்ளிக்கு வரும் வாகனங்கள் நிறுத்தவும் சிரமமாக உள்ளது.
- அருண்குமார், காந்திபுரம்.
பயணிகள் தவிப்பு கோவை ரயில்நிலையத்தில், ஒன்று முதல் நான்கு வரையுள்ள நடைமேடை செல்ல லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் வசதி உள்ளது. ஐந்து, ஆறு நடைமேடை செல்ல இத்தகைய வசதிகள் இல்லை. வயதானவர்கள், குழந்தைகள்லக்கேஜ்களுடன் சிரமப்படுகின்றனர்.
- சுரேஷ், காந்திபுரம்.
இரவில் விபத்து அதிகரிப்பு விளாங்குறிச்சி, செந்தோட்டம் அருகே காளப்பட்டி, சரவணம்பட்டி சாலையில், கேபிள் பதிப்பு பணிக்காக சாலை தோண்டப்பட்டது. குழியை சரியாக மூடாமல் விட்டுள்ளனர். இரவு நேரங்களில் குழி தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
- சவுந்தர், விளாங்குறிச்சி.
கொசுத்தொல்லை அதிகம் நீலிக்கோணாம்பாளையம், பெருமாள் கோவில் பின்புறம் சாக்கடை எடுத்து ஒரு மாதம் ஆகியும் குப்பையை அகற்றவில்லை. மீண்டும் கழிவு சாக்கடை கால்வாயிலே விழுகிறது. கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், குடியிருப்பு பகுதி முழுவதும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.
- ஸ்ரீநிதி, இடையர்பாளையம்.
மோசமான ரோடு மதுக்கரை அரசு மருத்துவமனை முதல் பைபாஸ் செல்லும் சாலையில், முல்லை நகர் சாலை முடிவில், சாலை மோசமாக சேதமடைந்துள்ளது. கரடு, முரடாக இருக்கும் சாலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
- கார்த்திக், மதுக்கரை.