/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
தனியார் பஸ்கள் அட்ராசிட்டி; வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்
/
தனியார் பஸ்கள் அட்ராசிட்டி; வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்
தனியார் பஸ்கள் அட்ராசிட்டி; வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்
தனியார் பஸ்கள் அட்ராசிட்டி; வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்
ADDED : ஆக 11, 2025 08:43 PM

போக்குவரத்து இடையூறு வால்பாறை நகர், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக அதிகளவு வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்பட்டுள்ளது. இதனால், அவ்வழியில் பயணிப்பவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவது உடன் போக்குவரத்து பாதிக்கிறது. எனவே, இங்கு 'பார்க்கிங்' செய்யும் வாகனங்களை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- மாரியப்பன், வால்பாறை.
தனியார் பஸ்கள் அட்ராசிட்டி பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் செல்லும் தனியார் பஸ்கள் அதிக சப்தத்துடன் ஹாரன் அடித்து செல்வதால், பைக் ஓட்டுநர்கள் நிலை தடுமாறி கீழே விழும் நிலைக்கு செல்கின்றனர். வாகன ஓட்டுநர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, ஆர்.டி.ஓ., அதிகாரிகள் இதை கவனித்து அபராதம் விதிக்க வேண்டும்.
- பெருமாள், பொள்ளாச்சி.
விதிமீறும் வாகனங்கள் நெகமம் -- கோவில்பாளையம் ரோட்டில் இருந்து, பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு திரும்பும் இடத்தில் இருக்கும் சர்வீஸ் ரோட்டில் அதிகளவு வாகனங்கள் 'ஒன் வே' திசையில் பயணிப்பதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, விபத்து தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன், நெகமம்.
பள்ளியை சூழ்ந்த புதர் நெகமம், ஆண்டிபாளையம் அரசு பள்ளி சுவரின் வெளிப்புறத்தில் அதிகளவு புதர் சூழ்ந்துள்ளது. இதனால், பள்ளி வளாகத்திற்குள் விஷஜந்துக்கள் அதிகரித்துள்ளது. பள்ளி சுவர் அருகே உள்ள புதரை அகற்றம் செய்ய ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.
-- தங்கராஜ், நெகமம்.
நீர்நிலையை துார்வாரணும் உடுமலை - பழநி ரோட்டில் கழுத்தறுத்தான் பள்ளத்தில் வடிகால் அமைக்கப்பட்டது. இதில் செடிகள், கழிவுகள் தேங்கியுள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது. இதை துார்வாரி சுத்தம் செய்ய நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவக்குமார், உடுமலை.
சேதமடைந்த ரோடு உடுமலை, ஸ்ரீநகர் பகுதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. ரோடு மேடும் பள்ளமுமாக இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். மழைநீரும் தேங்குவதால் காலையிலும் அவ்வழியாக செல்வோருக்கு பள்ளம் இருப்பது தெரிவதில்லை.
- சுதா, உடுமலை.
சுகாதார சீர்கேடு உடுமலை, சங்கிலி வீதியில் குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் கொட்டுகின்றனர். தெருநாய்கள் கழிவுகளை ரோடு முழுவதும் பரப்புகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், குடியிருப்புகளில் மிகுதியான துர்நாற்றமும் வீசுகிறது.
- பாலாஜி, உடுமலை.
சுத்தம் செய்யணும் உடுமலை ராஜலட்சுமி நகர் செல்லம் ரோட்டில் உள்ள கழிவுநீர் செல்லும் கால்வாய் குப்பை அடைத்துள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதை சுத்தம் செய்ய நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன், உடுமலை.
கால்நடைகள் உலா உடுமலை, உழவர் சந்தை ரோட்டில் கால்நடைகள் தாறுமாறாக உலா வருகின்றன. அவ்வழியாக வரும் பஸ்கள், கனரக வாகனங்கள் கால்நடைகளால் அப்பகுதியை கடக்க முடியாமல் காத்திருக்க வேண்டி வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
-செந்தில்குமார், உடுமலை.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு உடுமலை வ.உ.சி., வீதியில் ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களை தாறுமாறாக நிறுத்துகின்றனர். இதனால் மற்ற வாகனங்கள் அவ்வழியாக சென்று வருவதற்கு இடையூறாக உள்ளது. அருகில் உள்ள அரசு மருத்துவமனையிலிருந்து அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கும் முடியாமல் சிக்கல் ஏற்படுகிறது.
- நவீன்பிரபு, உடுமலை.
குப்பையான மின்கம்பம் கோவில்பாளையத்தில் இருந்து, செங்குட்டைபாளையம் செல்லும் வழியில் பழுதடைந்த மின் கம்பம் குப்பை போன்று கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவ்வழித்தடத்தில் பயணிக்கும் சிலர் இருக்கை போன்று உபயோகிக்கின்றனர். இதை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.
-- மூர்த்தி, கோவில்பாளையம்.