/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் தேங்கும் மழைநீர்; வாகன ஓட்டுநர்கள் அவதி
/
ரோட்டில் தேங்கும் மழைநீர்; வாகன ஓட்டுநர்கள் அவதி
ADDED : ஜூலை 21, 2025 09:55 PM

கால்வாயில் குப்பை கிணத்துக்கடவு, ஆர்.எஸ்.ரோட்டில் இருந்து இ.பி., அலுவலகம் செல்லும் ரோட்டின் ஓரத்தில் உள்ள கால்வாயில், கழிவு நீர் செல்ல முடியாத படி, குப்பை தேங்கி உள்ளது. மழை நேரத்தில் இங்கு தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் இதை கவனித்து உடனடியாக குப்பையை அகற்ற வேண்டும்.
- கவின், கிணத்துக்கடவு.
கேட்பாரற்று கிடக்கும் மின்கம்பம் கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி செல்லும் ரோட்டில், தனியார் லே-அவுட் அருகே ரோட்டோரம் பழைய மின்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதை மின் வாரியத்துறை அதிகாரிகள் கவனித்து, ரோட்டோரத்தில் போடப்பட்டுள்ள மின்கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும்.
-- பெருமாள், கிணத்துக்கடவு.
ஆக்கிரமிப்புகளால் அவதி வால்பாறை நகரில், ரோட்டை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் வைத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணியர் ரோட்டில் செல்ல சிரமப்படுகின்றனர். இதை நகராட்சி நிர்வாகத்தினர் கவனித்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- விபின், வால்பாறை.
ரோட்டில் மழைநீர் பொள்ளாச்சியில், - பல்லடம் ரோட்டின் ஓரத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்லும் போது சிரமப்படுகின்றனர். ரோடும் சேதமடைய துவங்கியுள்ளது. எனவே, மழை நீரை அகற்றம் செய்ய வேண்டும்.
- டேனியல், பொள்ளாச்சி.
ரோடு சீரமைக்கப்படுமா? பொள்ளாச்சி, எல்.ஐ.ஜி., காலனியில் ரோட்டில் தோண்டப்பட்ட குழி முறையாக மூடப்படாமல் மண் கொட்டி இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர். இதை நகராட்சி நிர்வாகத்தினர் கவனித்து, ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- தினேஷ் சங்கர், பொள்ளாச்சி.
மழைநீர் தேக்கம் உடுமலை பஸ் ஸ்டாண்ட் புதிதாக விரிவுபடுத்தப்பட்ட பகுதியில் மழைநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கிக்கிடக்கிறது. இதனால், பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். நகராட்சியினர் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- செல்வம், உடுமலை.
வேகத்தடை வேண்டும் உடுமலை கல்பனா ரோட்டில் வேகத்தடை இல்லாததால், வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. நால்ரோட்டிலிருந்து வரும் வாகனங்களும் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. வாகனங்கள் அதிவேகத்துடன் வருவதால் பொதுமக்கள் நடந்துசெல்வதற்கும் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. விபத்துகளை தடுக்க வேகத்தடைகள் அமைக்க வேண்டியதும் அவசியமாகிறது.
- அருள்குமார், உடுமலை.
தெருநாய்கள் தொல்லை கணக்கம்பாளையம் சிந்துநகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரிக்கிறது. காலை, மாலையில் தெருவில் விளையாடும் குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் துரத்துகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் ரோட்டில் நடந்துசெல்வதற்கு அச்சப்படுகின்றனர்.
-மணிமேகலை, உடுமலை.
சுகாதார சீர்கேடு உடுமலை, சீனிவாசா வீதி நால்ரோட்டில் குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்படுகின்றன. தெருநாய்கள் கழிவுகளை இழுத்துவந்து ரோட்டில் பரப்புகின்றன. மிகுதியான துர்நாற்றமும் வீசுவதால் பொதுமக்கள் அப்பகுதியை கடந்துசெல்ல முடியாமல் முகம் சுழிக்கின்றனர்.
- சீனிவாசன், உடுமலை.
சாய்ந்த மின்கம்பம் உடுமலை - பழநி ரோடு காந்திசந்து ஒன்றில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதைக்கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கம்பம் விழுந்து விபத்து ஏற்படும் முன், மின்வாரியத்தினர் இதை சரிசெய்ய வேண்டும்.
- சிவா, உடுமலை.

