நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையை சீரமைக்க கோரிக்கை
புதுச்சத்திரம் அடுத்த சிறுபாலையூர்- மணிக்கொள்ளை சாலை பழுதடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கபில்தேவ், மணிக்கொள்ளை.
சுகாதார வளாகம் தேவை
புதுச்சத்திரம் அடுத்த ஆலப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் சுகாதார வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயக்குமார், ஆலப்பாக்கம்.
சாலை ஆக்கிரமிப்பு
விருத்தாசலம் தென்கோட்டை வீதியில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அவசர சிகிச்சைக்கு நோயாளியுடன் செல்லும் ஆம்புலன்சுகள் நெரிசலில் சிக்கும் அவலம் தொடர்கிறது.
மருதையன், விருத்தாசலம்.
குடிநீர் வசதி தேவை
விருத்தாசலம் பெரியார் நகர் பஸ் நிறுத்தங்களின் பயணிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூங்கோதை, பெரியார் நகர்.