ADDED : ஏப் 10, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேகத்தடை தேவை
திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் விபத்துகளை தவிர்க்க பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரயில்வே மேம்பால ரவுண்டானாவில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அசோக்குமார், சிலம்பூர்.
காய்கறி மார்க்கெட்டில் மக்கள் அவதி
விருத்தாசலம் நகராட்சி காய்கறி மார்க்கெட்டில் பொது மக்கள் சென்றுவர முடியாத நிலையில், தாறுமாறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.
-கபிலன், விருத்தாசலம்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் தனியார் பைக், கார் ஆகியன நிறுத்தப்படுவதால், அதிகாரிகள், பயனாளிகள் மிகுந்த சிரமமடைகின்றனர்.
-செல்வமணி, வேப்பூர்.