ADDED : ஜூலை 21, 2025 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தினசரி குடிநீர் வசதி தேவை
தொழுதுார் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம்
ஊராட்சிகளுக்கு வினியோகம் செய்யப்படும்
குடிநீரை தினசரி  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேந்திரன், கொத்தனுார்.
குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?
சிறுபாக்கம் ஊராட்சி, எல்லையம்மன் கோவில் தெருவில் பழுதடைந்த மினி டேங்க்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்திரன், சிறுபாக்கம்.
நிழற்குடை தேவை
வேப்பூர் அடுத்த தொண்டாங்குறிச்சி ஊராட்சியில் பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவேந்திரன், தொண்டாங்குறிச்சி.

