நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையை ஆக்கிரமித்து கடைகள்
ராமநத்தம் கூட்டுரோட்டிலுள்ள மேம்பாலத்தின் கீழ் சாலையை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் அமைத்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கிறது.
பரமசிவம், தொழுதூர்.
தொற்று நோய் பரவும் அபாயம்
ஆவட்டி கூட்டுரோட்டில் குடியிருப்புகளையொட்டி குப்பைகளை கொட்டுவதால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
அன்பழகன், கல்லூர்.
தடுப்பு வேலி தேவை
சேலம் - கடலுார் சாலையையொட்டிய, வேப்பூர் வனத்தில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.
ஆறுமுகம், பெரியநெசலூர்.
போக்குவரத்து நெரிசல்
மங்கலம்பேட்டை கடைவீதி பஸ் நிறுத்தத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
பக்ருதீன், மங்கலம்பேட்டை.

